Home Blog Page 5889

முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே – வைரலாகிய புகைப்படம்

0

முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே – வைரலாகிய புகைப்படம்

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே. இதனையடுத்து இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார். 

அதன்பின், வழக்கம் போல அவருக்கும் சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால், எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஷ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து அதனை தொடர்ந்து அவருடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்

இந்நிலையில் இதற்காக அவர் நீச்சல் குளத்தில் தண்ணீரில் நனைந்த உடையுடன் உள்ள நிலையில் படு கவர்ச்சியான புகைப்படத்தை அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். முதல் முறையாக இவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்
முதல் முறையாக நீச்சல் உடையில் படு கவர்ச்சியில் ஸ்ருஷ்டி டாங்கே - வைரலாகிய புகைப்படம்

சமூக வலைத்தளங்கள் புகழ் ரோகினி ஐஏஎஸ்! மீண்டும் விரட்டியடித்த தமிழக அரசு! காரணம் என்ன?

0

சமூக வலைத்தளங்கள் புகழ் ரோகினி ஐஏஎஸ்! மீண்டும் விரட்டியடித்த தமிழக அரசு! காரணம் என்ன?

தமிழகம் முழுவதும் இன்று IAS IPS அதிகாரிகள் புதியதாக நியமிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் உள்ளனர், அதில் குறிப்பாக
தமிழ்நாடு இசை, கவின் கலை கல்லூரி பதிவாளராக உள்ள ரோஹிணி ஐ.ஏ.எஸ்., அவர்களை மத்திய அரசு பணிக்கு மாற்றியது தமிழக அரசு.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறையான உயர்கல்வித்துறைக்கு துணை செயலாளராக அவரை பணிமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இவர் சேலம் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்த பொது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களிடம் பிரபலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியராக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ரோகினி, அவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமாக பேசப்பட்டவர், தான் எங்கே சென்றாலும் எந்த மக்களுக்கு பொது சேவை செய்தாலும் திட்டங்களை செயல்படுத்தினாலும் அதை படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பரப்ப ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்,.

தமிழகம் முழுவதும் இருக்கும் மாவட்ட ஆட்சியர்களில் மிக குறுகிய காலத்தில் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த ரோகிணி ஐஏஎஸ் அவர்கள் பிரபலமாக இருந்த காலகட்டம் எல்லாம் உண்டு,. மற்ற மாவட்ட ஆட்சியர்கள் ரோகினி ஐஏஎஸ் மேல் பொறாமைப்படும் அளவிற்கு தனது செயலை மக்களிடம் சமூக வலைத்தளங்களின் விளம்பரம் மூலம் பிரபலமானார்,.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவிற்கு சாதகமாக அவர் நடந்து கொள்ளாத காரணத்தினாலும், தேர்தல் விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுத்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த மாவட்டம் என்பதால் கட்சி நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சரை நேரடியாகவே தொடர்புகொண்டு இவர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்தனர்,.

இதற்கும் மேலே முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற திமுகவின் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் பதவி ஏற்காத சமயத்தில் அழைப்பு விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்,. இந்த செயல் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோபப் பார்வைக்கு உள்ளானார். அடுத்த சில தினங்களில் அவர் முகவரியே இல்லாத இடத்திற்கு தமிழக அரசு தூக்கி அடித்தது,. தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைக்கல்லூரி இயக்குனராக நியமிக்கப்பட்டார்,.

ரோகிணி அவர் சேலம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுபடும் போது விவசாயிகள் மத்தியில் கண்ணீர் மல்க விடை பெற்றார்,. தற்போது அவரை தமிழ்நாடு அரசு சார்ந்த பணியில் இருந்து வெளியேற்றி மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைத்துள்ளது,. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்ந்த உயர்கல்வித்துறைக்கு துணை செயலாளராக பணியிட மாற்றம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடரும் மாணவிகள் தற்கொலை: ஃபாத்திமாவை அடுத்து திருச்சி மாணவி தற்கொலை

0

தொடரும் மாணவிகள் தற்கொலை: ஃபாத்திமாவை அடுத்து திருச்சி மாணவி தற்கொலை

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது அரசியல்ரீதியாகி பூதாகரமாகியுள்ள நிலையில் திருச்சியில் ஜார்கண்ட் மாநில மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி கே.கே.நகர் பகுதியில் தனியார் மகளிர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன் என்பவர் பட்டப்படிப்பு படித்து வந்தார். ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த ஜெப்ரா திடீரென நேற்று தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெப்ரா தற்கொலை தகவல் கிடைத்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணை செய்தபோது, ‘கல்லூரி பாடங்களை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள சிரமப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது

மேலும் மாணவி ஜெப்ரா அடிக்கடி தனது செல்போனை பயன்படுத்தியதால் விடுதி காப்பாளர் திட்டியதாகவும், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கல்லூரி மாணவிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து விடுதி காப்பாளரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து வருவதால் மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் தேவை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

0

படிப்படியாக குறையும் தங்கத்தின் விலை! சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

பெண்களுக்கு மிகவும் பிடித்தமான விசயங்களில் தங்க ஆபரணங்கள் தான் முதலிடத்தில் உள்ளது. அதுவும் தெனிந்திய மாநிலங்களில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலங்களில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. இதற்கு காரணம் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான அளவிற்கு அதிகமான மோகமே.

தமிழ்நாட்டில் மற்ற நகரங்களை விட சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக நடைபெறுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் தொடர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகிறது. இந்த ஏற்ற இறக்கமானது சென்னை தங்க வர்த்தகத்தில் பிரதிபலித்துள்ளது. 

சமீபத்தில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. பிறகு மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

தற்போதைய நிலையில் ஒரு சவரன் தங்கம் ஆபரணம் வாங்க வேண்டுமென்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.29,104-க்கும், கிராமிற்கு ரூ.11 குறைந்து ரூ.3,638-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.30,408-க்கும், கிராம் ரூ.3801-க்கும் என விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.47.70-க்கும், கிலோ ரூ.47,700-க்கும் என விற்பனை செய்யப்படுகிறது.

கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

0

கார்த்தி-சூர்யா படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா!

கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தை தமிழில் ‘பாபநாசம்’ என்ற படத்தையும் பல மலையாள படங்களையும் இயக்கிய இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த முடிவடைந்து பின்னணி உள்பட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாகவிருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்ல் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த படத்திற்கு ‘தம்பி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்கும் ‘தம்பி’ போஸ்டரை அண்ணன் சூர்யா வெளியிடுவது பொருத்தமாகவே கருதப்படுகிறது

கார்த்தி, ஜோதிகா, ஆகிய இருவரும் அக்கா-தம்பியாகவும் இவர்களது தந்தையாக சத்யராஜூம் நடிக்கும் இந்த படத்திற்கு ‘96’ படபுகழ் கோவிந்த் வசந்த் இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை வயாகம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

மகாத்மா காந்தி சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அதிர்ச்சி தகவல்

0

மகாத்மா காந்தி சாலை விபத்தில் உயிரிழந்தாரா? அதிர்ச்சி தகவல்

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்களில் முக்கிய காரணமானவர்களில் ஒருவரான மகாத்மா காந்தி, கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது உலகிற்கே தெரியும். இந்த நிலையில் அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார் என ஒடிசா மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஒடிசா மாநில பள்ளிக்கல்வி துறை மகாத்மா காந்தி குறித்து வெளியிட்ட புத்தகம் ஒன்றில் மகாத்மா காந்தி விபத்தில் உயிரிழந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் மகாத்மா காந்தி 150வது பிறந்த நாள் கொண்டாடப்படும் போது வெளியிட்ட ஒரு சிறப்பு புத்தகத்தில் தான் இந்த தவறான தகவல் உள்ளது

இந்த புத்தகத்தில் மகாத்மா காந்தி குறித்து குறிப்பிடப்பட்டுள்ள தகவலுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உடனடியாக மாநில அரசு இதற்கு பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. மகாத்மா காந்தி குறித்த தவறான தகவல் இடம்பெற காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒடிஷா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

0

ஏர்டெல் வாடிக்கையாளரா? உடனே மாறுங்கள் என அறிவுறுத்தல்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 3ஜி சிம்மை பயன்படுத்தி கொண்டு இருந்தால் உடனடியாக அவற்றை 4ஜி சேவை சிம்’ ஆக மாற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

இந்தியாவில் ஜியோவை அடுத்து இரண்டாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக இருக்கும் ஏர்டெல் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி தற்போது 3ஜி சேவை நிறுத்தப்படுவதாகவும், எனவே 3ஜி சிம் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் சென்று 4ஜி சிம் பெற்றுக் கொள்ளும்படியும் அறிவித்துள்ளது

ஆனால் அதேவேளையில் 2ஜி சேவையை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது

பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு மாறிவிட்டதால் செலவை மிச்சப்படுத்தும் நோக்கில் 3ஜி சேவை நிறுத்தப்படும் என்றும் ஏர்டெல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

எனவே 3ஜி சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் உடனடியாக அருகிலுள்ள ஏர்டெல் கஸ்டமர் அலுவலகத்திற்கு சென்று மாற்றிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு

0

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல 36 பெண்கள் முன்பதிவு! இவ்விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என அறிவிப்பு

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் ஆகியோர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்களை கடந்த ஆண்டு நடத்தினார்கள்.

இதையடுத்து அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்கு அனுமதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு கொண்ட வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டார் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகாய்.

அதே நேரத்தில், அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு அனுமதிக்கலாம் என்ற முந்தைய உத்தரவு பற்றி தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை, இதனால் முந்தைய தீர்ப்புக்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படவுள்ளது. இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ள பூஜையில் வழிபாடு நடத்த அனுமதி கோரி 36 பெண்கள் இணையதளம் வாயிலாக பங்கேற்க முன்பதிவு செய்துள்ளனர். இதனால் பதற்றம் நீடித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பெண்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 10,000 போலிசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இதனிடையே சட்டநிபுணர்களின் சட்ட ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்யலாம் என்று முடிவு செய்யப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை செயல்படுத்த அரசு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேரள மாநில அரசின் நிலைப்பாடு பற்றி பேட்டியளித்த தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அவர்கள்,. “சபரிமலைக்கு பெண்களை அழைத்து வர கேரள அரசு எந்த முயற்சியும் எடுக்காது எனவும் ஊக்கப்படுத்தவும் செய்யாது” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

விராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால்

0

விராத், ரோஹித் ஏமாற்றினாலும் சதமடித்த மயாங்க் அகர்வால்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்று வங்கதேசம் 150 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை இந்திய அணி 63 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்கள் எடுத்துள்ளது

தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 6 ரன்களிலும் விராத் கோஹ்லி ரன் ஏதும் அடிக்காமலும் ஏமாற்றினாலும் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான மயாங்க் அகர்வால் அருமையாக விளையாடி சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் விளையாடி வரும் ரஹானே 44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். முன்னதாக புஜாரே அதிரடியாக 54 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச தரப்பில் அபுஜயித் அபாரமாக பந்துவீசி மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்திய அணி தற்போது 64 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 300 ரன்கள் முன்னிலை பெற்றால் டிக்ளேர் செய்துவிட வாய்ப்பு உள்ளதாகவும், இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

பள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் போதை புகையிலை! தமிழக அரசை எச்சரிக்கும் இராமதாஸ்

0

பள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் போதை புகையிலை! தமிழக அரசை எச்சரிக்கும் இராமதாஸ்

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை போதைப் புகையிலை பயன்பாட்டுக்கு அடிமையாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் பள்ளிகளில் புகையிலை புழக்கம் நீடிப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கூல் லிப் (Cool Lip) என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் வடிகட்டியுடன் கூடிய போதைப் புகையிலை தான் மாணவர்களை சீரழிக்கும் தீயசக்தியாக உருவெடுத்திருக்கிறது. கூல் லிப் புகையிலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் கூல் லிப் புகையிலை கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்டு தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. தொடக்கத்தில் சில கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட இந்த போதைப் புகையிலைப் பொருள், இப்போது பள்ளிகளை முக்கிய சந்தையாக மாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் மாணவர்களையே விற்பனை முகவர்களாக மாற்றியிருக்கின்றனர் இப்பொருளை புழக்கத்தில் விட்டவர்கள்.

வழக்கமான போதைப் பொருட்களுக்கு கல்லூரி மாணவர்கள் எவ்வாறு அடிமையாக்கப்படுவார்களோ, அதேபோல் தான் பள்ளி மாணவர்களும் கூல் லிப் போதைப் புகையிலைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முதலில் சில நாட்களுக்கு கூல் லிப் போதைப் புகையிலை இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் போதைப் புகையிலைக்கு அடிமையான பின்னர் அவர்கள் ஒரு பாக்கெட்டுக்கு ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை பிடித்து தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். வசதி படைத்த மாணவர்கள் பணத்தைக் கொடுத்து கூல் லிப் போதைப் புகையிலையை வாங்கி பயன்படுத்தும் நிலையில், பணம் கிடைக்காத மாணவர்கள் தங்களின் நண்பர்களை மூளைச்சலவை செய்து இந்த பழக்கத்துக்கு அடிமையாக்கி, அதற்கு ஈடாக தங்கள் பயன்பாட்டுக்கு கூல் லிப் புகையிலையை இலவசமாக பெற்றுக் கொள்கின்றனர். இப்படியாக இந்த போதைக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அடிமையாகின்றனர்.

கூல் லிப் என்பது சற்று மாறுபட்ட வடிவத்தில் கிடைக்கும் மெல்லும் புகையிலை ஆகும். வடிகட்டி பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கூல் லிப் புகையிலையை வாயில் போட்டு, ஒரு ஓரத்தில் அடக்கி வைத்துக் கொண்டால், அப்புகையிலை பட்டதும் சுரக்கும் உமிழ்நீர் ஒருவகையான போதையை ஏற்படுத்துகிறது. அதற்கு அடிமையாகும் மாணவர்களும், இளைஞர்களும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்றனர். சென்னையில் பல பள்ளிகளில் பாடவேளைகளிலேயே மாணவர்கள் இந்த புகையிலையை பயன்படுத்தி மயங்கிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல நேரங்களில் இந்த புகையிலை வாய் நாற்றத்தைப் போக்கும் வாசனைப் பொருள் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படுவதால், இதற்கு மாணவர்கள் மிகவும் எளிதாக அடிமையாகின்றனர். இது மிக மிக ஆபத்தான போக்கு ஆகும்.

புகைக்கும் புகையிலை, மெல்லும் புகையிலை ஆகியவற்றை விட கூல் லிப் புகையிலை மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இதை தொடர்ந்து பயன்படுத்துவதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட 50&க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். வழக்கமான புகையிலைப் பொருட்கள் இளைஞர்களை குறி வைக்கும் நிலையில், கூல் லிப் மாணவர்களை குறி வைப்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது. பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்று விதிகள் உள்ள நிலையில், கூல் லிப் போதைப் புகையிலை வகுப்பறை வரை வந்து பரபரப்பாக விற்பனையாகிறது.

மாணவர்களின் எதிர்காலம் அவர்களின் பதின் வயது பழக்க வழக்கங்களை பொறுத்தே அமையும். சரியாக பதின் வயது தொடங்கும் பருவத்தில் மாணவர்கள் கூல் லிப் புகையிலைக்கு அடிமையானால் அடுத்தடுத்தக் கட்டங்களில் இன்னும் மோசமான போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி எதிர்காலத்தை இழந்து விடக்கூடும். இந்த ஆபத்திலிருந்து மாணவர்களைக் காக்கும் கடமை தமிழக அரசுக்கு உண்டு. எனவே, தமிழ்நாட்டில் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கூல் லிப் போதைப் புகையிலை விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.