Home Blog Page 5927

வெளிநாட்டு பயணம் வெற்றியா? தமிழகம் திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

0

வெளிநாட்டு பயணம் வெற்றியா? தமிழகம் திரும்பிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: தமிழகத்திற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது 14 நாள் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பியுள்ளார்.

தமிழ் நாட்டிற்கு வெளிநாட்டு தொழில் முதலீடுகளை கொண்டுவர அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்றார். கடந்த மாதம் 28 ம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் முதலில் இங்கிலாந்துக்கும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார்.

அங்கு, தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்த முதல்-அமைச்சர், அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த வெளிநாட்டு பயணத்தில் தமிழக முதல்வருடன்,  அமைச்சர் விஜயபாஸ்கர், மற்றும் முதல்வரின் செயலாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்டோர்கள் உடன் சென்றனர். இந்த பயணத்தின் போது இங்கிலாந்து நாட்டில் முன்னணி மருத்துவமனைகள், கால்நடை பூங்கா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஒரு அரங்கில் தமிழக முதல்வர் பேசும் போது, ‘இந்தியாவிலேயே முதலீடு செய்ய ஏற்ற மாநிலம் தமிழகம் தான்’ என்று கூறினார். இதையடுத்து புகழ் பெற்ற மருத்துவமனையான  கிங்ஸ் மருத்துவமனையின் செயல்பாடுகளை பார்வையிட்டதோடு, அது தொடர்பான தொழில்நுட்பங்களையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். மேலும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு குறித்து இங்கிலாந்து நிறுவனத்துடன் ஆலோசனையும் மேற்கொண்டார். 

அமெரிக்காவில் கடந்த 3 மற்றும் 4ம் தேதி நியூயார்க் மற்றும் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது தமிழக அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்களும் கலந்து கொண்டனர். பின்னர் அமெரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்து கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவினர் அடுத்து துபாய் சென்றனர்.

துபாயில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் நடந்த வர்த்தக தலைவர்கள் பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் ரூ.4,200 கோடி முதலீடு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இதனையடுத்து தமிழக முதல்வர் தனது 14 நாள் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று அதிகாலை சென்னை திரும்பினார். பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், “அயல் நாட்டில் வாழும் தமிழர்களின் வரவேற்பு மகிழ்ச்சியை தந்தது. இது போன்ற அயல்நாட்டு அரசு முறை பயணம் தொடரும். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தொழிலில் முதலீடு செய்ய பலரும் ஆர்வத்தில் உள்ளனர்.

மேலும் சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம். கார் உற்பத்தி தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளன. துபாயில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனையடுத்து தமிழகம் வளர்ச்சி பாதையில் பயணிக்கும். உலகமெங்கும் வாழும்  தமிழர்களை ஒன்றிணைக்க யாதும் ஊரே திட்டம் தொடங்கப்படும். இந்த அரசுமுறைப் பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சாதி பாகுபாடு பற்றி போலி அறிக்கையை விட்டு பள்ளி நிர்வாகத்திடம் அசிங்கப்பட்ட ஸ்டாலின்

0

சாதி பாகுபாடு பற்றி போலி அறிக்கையை விட்டு பள்ளி நிர்வாகத்திடம் அசிங்கப்பட்ட ஸ்டாலின்

சாதிய பாகுபாட்டை பரப்பும் விதமாக சமூக வலைத்தளங்களில் ஆறாம் வகுப்பிற்கான கேள்வித்தாள் ஒன்று வெளியாகி பரவி வந்தது. அதில் இந்திய அரசமைப்பு சட்டத்தைத் தயாரித்து, நாட்டு மக்களுக்கு வழங்கிய சட்ட மேதையான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை இழிவு படுத்துகிற வகையிலும், அதேபோல், தலித் என்றால் யார் என்று கேள்வி கேட்டு அதற்கு தீண்டத்தகாதவர் என்று தேர்வு செய்யும் வகையிலும், மேலும் இத்துடன் சிறுபான்மை சமுதாய மக்களான முஸ்லிம்களை அவமதிக்கின்ற வகையிலும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

இவ்வாறு சர்ச்சைக்குரிய இந்த கேள்வித்தாளானது கேந்த்ரியா வித்யாலயா பள்ளியில் உருவாக்கப்பட்டது என்றும் வதந்திகள் பரவி வந்தன. இது குறித்து திமுக தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

சாதி பாகுபாட்டையும் வகுப்புவாதத்தையும் பரப்பும் கேள்விகள் கேந்தரிய வித்யாலயா 6ம் வகுப்புத் தேர்வில் இடம்பெற்றிருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன்.

சாதி பாகுபாடு பற்றி போலி அறிக்கையை விட்டு பள்ளி நிர்வாகத்திடம் அசிங்கப்பட்ட ஸ்டாலின்

இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெறச் செய்தவர்கள் விசாரிக்கப்பட்டு உரிய சட்டங்கள் மூலம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.

மேலும் இது குறித்து படிக்க : தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்

அவரையடுத்து திமுக கூட்டணி கட்சி தலைவரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ அவர்களும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த சர்ச்சைக்குரிய அந்த ஆறாம் வகுப்பிற்கான சமூக அறிவியல் பாட கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னையில் உள்ள கேந்த்ரியா வித்யாலயா நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , முஸ்லீம்கள் குறித்தும் பட்டியல் இனத்தவர் குறித்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளி கேள்வித்தாளில் தவறாக சித்தரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதி பாகுபாடு பற்றி போலி அறிக்கையை விட்டு பள்ளி நிர்வாகத்திடம் அசிங்கப்பட்ட ஸ்டாலின்

மேலும் சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவே இல்லை. எனவே சமூக வலைத்தளவாசிகள் இது போன்ற போலியான கேள்வித்தாளை பரப்ப வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக பொய்யான அறிக்கையை வெளியிட்ட சில அரசியல்வாதிகளை போனில் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அது மட்டுமல்லாமல் பொய் அறிக்கை வெளியிட்ட அரசியல்வாதிகளுக்கு விளக்கம் கேட்டு வேந்திரிய வித்யாலயம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுளளது என்றும் கூறியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் CBSC நிர்வாகமும் இது குறித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவிலும் எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய மறுப்பையும் அதற்கான விளக்கத்தையும் பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலில் சாதி மறுப்பு அரசியல் செய்வதாக கூறி கொண்டு முழுமையாக ஆராயாமல் அவசரகதியில் ஸ்டாலின் வெளியிட்ட இந்த அறிக்கை அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தடை! தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என பாகிஸ்தான் எச்சரிக்கை.

0

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய விமானத்திற்கு தங்கள் நாட்டு வான் வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்துள்ளது

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா வுக்கு அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் வரும் ஒன்பதாம் தேதி புறப்படும் அவர் தன் சுற்றுப்பயணத்தின்போது மேற்குறிப்பிட்ட நாடுகளின் முக்கிய தலைவர்களை சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு நடத்த உள்ளார்.

குறிப்பாக ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத பிரச்சினைகள் குறித்து பேச்சு நடத்த உள்ளார்
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானில் உள்ள பாலக்கோட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை குண்டு வீசித் தகர்த்தது.

இதை தொடர்ந்து இந்தியா வழியாக வரும் அனைத்து விமானங்களும் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் முழுமையாக தடை விதித்தது. இதனால் பாகிஸ்தானுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டது.
வருவாய் இழப்பு ஏற்பட்டதால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் அனைத்து விமான போக்குவரத்திற்கும் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்தலாம் என்று தடையை நீக்கியது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் 370 வது பிரிவு நீக்கப்பட்டதை காரணம் காட்டி இந்திய விமானங்கள் பாகிஸ்தான் நாட்டு வான்வெளியை பயன்படுத்தக்கூடாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் செல்லும் விமானத்திற்கு தங்கள் நாட்டு வான் எல்லையை பயன்படுத்த முழுமையாக தடை விதித்தது பாகிஸ்தான் அரசு.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதலுடன் வெளியுறவு துறை அமைச்சர் ஷா நகமுது குரேஷி நேற்று வெளியிட்டார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

0

விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவிப்பு

இந்தியாவின் முதல் முயற்சியான நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்யும் சந்திரயான் -2 என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே இதுவரை சந்திரனில் ஒரு விண்கலத்தை தரையிறக்க முடிந்துள்ள நிலையில் தற்போது இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று கவனித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டரின் வேகத்தை தேவையான நிலைக்குக் கொண்டு வர முடியாமல் போனதால் சந்திரனில் தரையிறக்கும் இந்தியாவின் கனவு சிதைந்தது. இந்நிலையில் கட்டுபாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் என்ன ஆனது என்பது பற்றிய தேடல் ஆரம்பமானது.

இதனையடுத்து தற்போது நிலவில் தரை இறக்கும் முயற்சியின் போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்த இந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திரனின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சுற்றுக் கலன், லேண்டர், ஆய்வூர்தி ஆகிய மூன்று பாகங்களைக் கொண்ட சந்திரயான் 2 என்ற விண்கலத்தை ஜூலை 22 ஆம் தேதி அன்று ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவியது.

இந்த முயற்சியில் நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்த பிறகு, பிரக்யான் ஆய்வூதியுடன் கூடிய விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிக்கப்பட்டது. விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடர, மறுபுறம் ஆர்பிட்டர் எனப்படும் சுற்றுக்கலன், குறைந்தபட்சமாக 100 கிலோ மீட்டர் உயரத்தில் அமைந்த சுற்றுப் பாதையில் நிலவை தொடர்ந்து சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இந்த முயற்சியின் இறுதிகட்டமாக விக்ரம் லேண்டரை, நிலவின் இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதளப் பரப்பில் தரை இறக்கும் செயல்பாட்டை சனிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு இஸ்ரோ மேற்கொண்டது. மெல்ல, மெல்ல விக்ரமின் வேகம் அதிகரிக்கப்பட்டு அதே வேளையில், தேவையான இடத்தில் வேகத்தைக் குறைத்து, கோணத்தை மாற்றும் மிகச் சவாலான பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

நிலவில் இருந்து 2 கிலோ மீட்டர் என்ற உயரத்தை விக்ரம் லேண்டர் அடைந்த போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை அது இழந்தது. இதனையடுத்து ஆர்பிட்டர் மூலமாக, விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், விக்ரம் லேண்டரின் இருப்பிடம் தொடர்பான தெர்மல் இமேஜ் புகைப்படத்தை, தற்போது ஆர்பிட்டர் அனுப்பி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் லேண்டர் உடன் இன்னும் தகவல் தொடர்பு கிடைக்கவில்லை என்றும் சிவன் கூறியுள்ளார். தொடர்ந்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் தகவல் தொடர்பு மீட்டமைக்கப்படும் என்றும் சிவன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.

0

தலித் என்பதன் பொருள் என்ன? 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி! கொந்தளிப்பில் மு.க.ஸ்டாலின்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்தரிய வித்தியாலயா பள்ளியில் 6 ஆம் வகுப்பு பள்ளி தேர்வில்
‘தலித்’ என்பதன் பொருள் என்ன? என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது, இது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

கேள்விக்கு பதிலாக தீண்டத்தகாதவர்கள் என்ற பதிலை விருப்பமாக தேர்ந்தெடுக்கவும் என்று குறிப்பிட்டுள்ளனர், இது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் *தலித் சமுதாயத்தைச் அரசாங்கம் எப்படி குறிப்பிடுகிறது? *அம்பேத்கர் எந்த பிரிவை சேர்ந்தவர்? *முஸ்லிம் பற்றிய பொதுவான நிலைபாடு என்ன? என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது, இந்த கேள்விகளும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தலித் என்று பெயர் சொல்லி அழைத்தால் வன்கொடுமை தடுப்பு சட்டம் உடனடியாக பாய்கிறது,
ஊர் பகுதியில் உயர்சாதியினரும், காலணி பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் வாழ்கின்ற இடமாகவே எல்லாரும் பேசி வந்தனர். அனைவரின் பேச்சு வழக்கம் அப்படி தான் இருக்கும், தற்போது காலணி பகுதி சொன்னாலே பயங்கர எதிர்ப்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் எழும்பும்,

காரணம் தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சி அப்படி இருக்கிறது, அரசும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. காலக்கட்டம் இப்படி இருக்கும் போது பள்ளி குழந்தைகள் மனதில் தலித் என்றால் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணத்தை விதைப்பது அதுவும் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டின் கேந்தரிய வித்தியாலயா பள்ளியே செய்தது மன்னிக்க முடியாத செயலாகும் என்று கல்வியாளர்கள் கண்டித்துள்ளனர்.

இப்படிப்பட்ட கேள்விகளை இடம்பெற செய்தவர்கள் மீது விசாரிக்கப்பட்டு சட்டத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் கண்டித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடே துணை நிற்கிறது- மருத்துவர் இராமதாஸ் ஆறுதல்!

0

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நாடே துணை நிற்கிறது- மருத்துவர் இராமதாஸ் ஆறுதல் தெரிவித்துள்ளார்!

  1. சந்திரயான் விண்கலத்தின் ஆராய்ச்சிக் கருவியை தரையிறக்குவதில் ஏற்பட்ட பின்னடைவு தற்காலிகமானதே. பின்னடைவை சந்திக்காத விண்வெளி ஆராய்ச்சி உலகில் ஏதுமில்லை. சந்திரயான்-2 முயற்சி மிகவும் அற்புதமானது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களின் முயற்சி போற்றத்தக்கது!
  2. 2.1 கி.மீ இடைவெளியில் நிலவு சாதனையை இழந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விரைவில் நிலவை ஆளும் முயற்சியில் வெற்றியை சுவைப்பர். சாதாரண மனிதனுக்கும் நிலவு ஆராய்ச்சி குறித்த விழிப்புணர்வை சந்திரயான் -2 ஏற்படுத்தியுள்ளது. நிலவை நெருங்கும் முயற்சியில் விஞ்ஞானிகளுக்கு இந்த நாடு துணை நிற்கும்!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

0

ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்

நாளுக்கு நாள் புவி வெப்பமயமாதலின் தாக்கமும்,அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.

இது குறித்து அச்சுறுத்தும் புவிவெப்பமயமாதல்: இந்தியா
விழித்துக்கொள்ள புதிய வேண்டுகோள்! என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

புவிவெப்பமயமாதலின் தாக்கமும், அதனால் மனிதகுலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பாங்காக் காலநிலை மாநாடு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளது. இது ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணியாகவே தோன்றுகிறது.

புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவை தடுப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்து, அறிவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு காலநிலை மாநாடு வரும் 23 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. அம்மாநாட்டுக்கு ஆயத்தமாவதற்காக கானா, பிரேசில், தாய்லாந்து ஆகிய நாடுகளில் மண்டல மாநாடுகள் நடத்தப்படும் என்று ஐ.நா. அமைப்பு அறிவித்திருந்த நிலையில், ஆசிய – பசுபிக் மண்டலத்திற்கான மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் கடந்த 2ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவடைகிறது.

புவிவெப்பமயமாதலுக்கு ஆசிய பசுபிக் நாடுகள் இதுவரை முதன்மைக் காரணமில்லை என்றாலும், இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் மாசுக்காற்று வெளியாகும். அதுமட்டுமின்றி, புவிவெப்பமயமாதலால் இந்நாடுகள் தான் மிகக்கடுமையான பேரழிவுகளை சந்திக்கும். புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய இந்தியாவும் இம்மண்டலத்தில் தான் உள்ளது என்பதால் இம்மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.

புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், பன்னாட்டு அமைப்புகள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் சார்பிலான பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்து நான் உருவாக்கிய பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர. அருள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா போன்ற நாடுகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியே விரிவாகவும், அழுத்தமாகவும் விவாதிக்கப்பட்டன.

மாநாட்டில் பேசிய ஐ.நா காலநிலை பிரிவு துணை செயலரும், இந்தியருமான ஓவைஸ் சர்மத் ‘‘பாரிஸ் காலநிலை உடன்பாட்டின் இலக்குகளை முழுமையாக நிறைவேற்றினால் கூட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகும். இதனால் பயன் கிடைக்காது. மாறாக, உலகநாடுகள் அனைத்தும் இணைந்து வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை செப்டம்பர் 23 ஐநா மாநாட்டில் வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இதற்கான நடவடிக்கைகளை தங்களின் அமைப்புகள் சமரசமின்றி மேற்கொள்ளும் என தாய்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் வராவுட் சில்பா ஆர்ச்சா (Varawut Silpa-archa), ஆசிய- பசிபிக் மண்டலத்திற்கான ஐ.நா. சமூக, பொருளாதார ஆணைய செயலர் அர்மிடா அலிஸ்ஜபானா (Ms. Armida Alisjahbana) ஆகியோர் உறுதியளித்தனர்.

தாய்லாந்தில் நடைபெற்ற இந்த மாநாடும், நியூயார்க்கில் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு காலநிலை மாநாடும் கூடிக்கலையும் தன்மை கொண்டவையோ, உலகத் தலைவர்கள் சுற்றுலா வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையோ அல்ல. மாறாக, புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவிலிருந்து மனிதகுலத்தை காப்பதற்காக எழுப்பப்படும் கூக்குரல்கள் ஆகும். ஆகவே இந்த மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலை அலட்சியம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டியது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலையாய கடமையாகும்.

புவிவெப்பமயமாதலின் தாக்கங்களை இந்தியா உணரத் தொடங்கிவிட்டது. ஒருபுறம் இராஜஸ்தானில் மிக அதிக வெப்பம் பதிவான நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டின் அவலாஞ்சியில் மிக அதிக மழை பெய்தது. ஐரோப்பாவில் இதுவரை இல்லாத வெப்பம் பதிவாகியுள்ளது. அமெரிக்க கண்டத்தின் மிக வேகமான டோரியன் புயல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பஹாமாஸ் தீவுகளைத் தாக்கி சின்னாபின்னம் ஆக்கியது. ஆர்ட்டிக் பனிப்பாறை உருகுதல், உலகின் பல நகரங்கள் பெரும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளுதல் என புவிவெப்பமயமாதல் நம்மை சூழ்ந்து கொண்டிருப்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.

இந்த அழிவுகள் அதிகரிக்காமல் தடுக்கவும், புவியைக் காக்கவும் வேண்டுமானால் அடுத்த ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியாகும் அளவு கட்டுப்படுத்தப்படுவதுடன், படிப்படியாக குறைக்கப்படவும் வேண்டும். கரியமில வாயு வெளியாகும் அளவு 2030-ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடாகவும், 2050-ஆம் ஆண்டில் சுழியமாகவும் குறைக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியா அளிக்க வேண்டிய பங்களிப்புகள் ஏராளம்.

உலகைக் காப்பாற்றுவதற்கான இலக்குகளை எட்ட இந்தியா இப்போது பயணிக்கும் வேகம் போதாது. இந்த வேகத்தை விரைவுபடுத்துவதற்காகத் தான் இந்தியாவில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கான ஆசிய-பசுபிக் மாநாட்டில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விழித்துக் கொண்டு போர்க்கால வேகத்தில் கரியமில வாயு வெளியாகும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் காலநிலை அவசர நிலையை அரசுகள் உடனடியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மூளைச்சலவை செய்து கடத்தப்பட்ட இளம்பெண்களை 20 லட்சம் கொடுத்து மீட்டு வந்தேன்! திருமுருகன் ஜி வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம்.

0

தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திரு கே.சி.திருமுருகன் ஜி அவர்கள் அதிர்ச்சி தகவலை ஒன்றை தெரிவித்துள்ளார்!

மதுரையிலிருந்து இரண்டு இளம்பெண்கள் கடத்தப்பட்டதாகவும் அவர்களை ராயபுரத்தில் கடத்தி வைத்துக்கொண்டு பேரம் ‌பேசியதாகவும் அவர்களிடம் இருபது ‌லட்சம் ரூபாயை கொடுத்து இளம் பெண்களை மீட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இளம்பெண்கள் கருவுற்று இருந்தால் ஒரு தொகையையும் கருவுறாமல் இருந்தால் இன்னொரு தொகையும் பேரம் பேசப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களை மூளைச்சலவை செய்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்து எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றும் ஒரு கும்பல் தமிழகத்தில் தொழிலாகவே செய்து வருகின்றனர் எனவும் தமிழகம் முழுவதும் இதை ஒரு கும்பல் தான் செய்து வருகிறது என்றும் அவர்களுக்கு அந்த கும்பலின் தலைவர் முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இரண்டு சமுதாயத்தினரிடையே மோதல் காரணமாக அம்பேத்கர் சிலை தாக்கப்பட்டது. சிலை தாக்கப்பட்டது முட்டாள்தனமான செயல் எனவும் இதை தாக்கப்படும்போது வெறித்தனமாக பார்த்தவர்கள் காரை கொளுத்தியவர்கள் மீது ஏன் வெறித்தனமாக பார்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

சிலை எதனால் தாக்கப்பட்டது என்று எவரும் கேள்வி கேட்கவில்லை எந்த ஊடகமும் வெளிக்காட்டவில்லை, அந்த நேரத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்கள் மட்டும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர், அதற்கு முன்னதாக காரை வழிமறித்து தீ யீட்டு கொளுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் யாருடைய பார்வையும் திரும்பவில்லை அதை ஊடகமும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அம்பேத்கர் ஒரு தேசியத் சின்னம்! ஒரு ஒரு குறிப்பிட்ட கும்பல் வக்கிர செயல்களையும் வன்முறை செயல்களையும் செய்துவிட்டு அம்பேத்கர் பின்னால் போய் ஒளிந்துகொண்டுள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் தமிழிசை!

0

தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் திருமதி தமிழிசை சௌந்தரராஜனுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்திய வண்ணம் இருக்கின்றனர். அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர்,பொதுமக்கள் என அனைவரும் தமிழிசைக்கு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று பரவலாக வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் பல பிரமுகர்கள் நேரில் சந்தித்து தமிழிசையின் பணி சிறக்க தங்களின் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர், கட்சி சார்பற்ற நடுநிலைவாதிகள், கவிஞர்கள், இளைஞர்கள் அவரை மீம்ஸ் போட்டு கேலி செய்து வந்த சமூக வலைத்தள வாசிகளும் அவருடைய வளர்ச்சியை கண்டு பெருமிதம் கொண்டுள்ளனர்.

இது ஒருபுறமிருக்க தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனை நேற்று தரிசித்தார். அம்மனுக்கு ஆரத்தி எடுத்து வழிப்பட்டார், இதைத்தொடர்ந்து மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் அவர்களிடம் தன்னை ஆளுனராக ‌நியமிக்கப்பட்ட ஆணையை காண்பித்து ஆசியும் பெற்றார்.

ஆளுநர் பணியை மிகச் சிறப்பாக செய்து வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டுமென்று தமிழிசையை அனைத்து தரப்பினரும் வாழ்த்தி வருவது தமிழக பாஜகவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் கடுமையான உழைத்தவர்களுக்கு சரியான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியால் தரப்படுகிறது என்று தொண்டர்களும் பெருமையாக மற்றவர்களிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை

0

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை

தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கும் சுங்கக் கட்டண கணக்கீடு சுரண்டலின் உச்சம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறித்து தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு விளக்கம் அளித்திருக்கிறது. சுங்கக் கட்டணம் நீண்ட காலமாகவும், அளவுக்கு அதிகமாகவும் வசூலிக்கப்படுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள காரணங்கள், கந்து வட்டியை நியாயப்படுத்தும் வகையில் தான் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 45 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் ஆண்டுக்கு ஒரு முறை சராசரியாக 20 விழுக்காடு வரை உயர்த்தப்படுகின்றன. ஒவ்வொரு முறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் போது அதற்கு மக்களிடையே எதிர்ப்பு எழுவதும், அதை நெடுஞ்சாலைகள் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் வாடிக்கையாகி விட்டது. நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்; அதன்பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் கூட, அது நடைமுறைக்கு வருவதற்கான அறிகுறிகள் கண்ணுக்கெட்டியவரை தெரியவில்லை.

சென்னை தாம்பரம் -திண்டிவனம் இடையே பயணிப்பதற்கான 45 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டை அடுத்த பரணூரிலும், திண்டிவனத்திற்கு முன்பாக ஆத்தூரிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை இரண்டிலுமே 24 மணி நேரம் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் நிற்கும். இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணமும் அதிகமாக வசூலிக்கப்படும். ஆனாலும் கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது ஏன்? என்ற வினாவுக்கு மட்டும் விடை கிடைக்கவில்லை. இப்போது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி பெற்றுள்ள விளக்கத்தின் மூலமாகத் தான் சுங்கக்கட்டணம் வசூலிப்ப்பதில் நடக்கும் கொள்ளை அம்பலமாகியுள்ளது.

தாம்பரம் – திண்டிவனம் இடையிலான 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் 1999-2004 காலத்தில் நடைபெற்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இச்சாலை சுங்கக்கட்டண சாலையாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டுமே செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுங்கச்சாலை அமைக்கப்பட்டது முதல் 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான 13 ஆண்டுகள் ஆறு மாத காலத்தில் பரணூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் ரூ.1098 கோடி சுங்கக்கட்டணமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. அதன்பின் இப்போது வரையிலான ஓராண்டு காலத்தையும் கணக்கில் கொண்டால் அதில் குறைந்தது ரூ.150 கோடி வசூலிக்கப்பட்டிருக்கும். சாலை அமைக்க செலவிடப்பட்டதை விட இரு மடங்கிற்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்னும் முழு கட்டணம் வசூலிப்பது ஏன்? என்ற வினாவுக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் தான் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இது மக்கள் மீதான பொருளாதாரா தாக்குதலே! முக்கிய விவகாரத்தில் ராமதாஸ் கொடுக்கும் அதிரடி ஆலோசனை

நெடுஞ்சாலை அமைக்க ரூ.536 கோடி மட்டும் தான் செலவிடப்பட்டது என்றாலும், அதற்கான பணிகள் தொடங்கப்பட்ட நாள் முதல் முடிவடைந்த நாள் வரை பணவீக்கம் கணக்கிடப்பட்டு, அதுவும் திட்டச் செலவில் சேர்க்கப்பட்டது. அதனால் திட்டச் செலவு ரூ.770.18 கோடியாக அதிகரித்து விட்டதாம். அதுமட்டுமின்றி, சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகையில் 4% பராமரிப்புக்காக ஒதுக்கப் பட்டதுடன், இயக்கச் செலவுகள் என்ற பெயரில் 12% கழிக்கப்பட்டது. இத்தகைய கழிவுகளுக்குப் பிறகு சுங்கக்கட்டணமாக ரூ.416.04 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டிருப்பதாக கணக்கில் காட்டப் பட்டுள்ளது. ரூ.770 கோடி முதலீட்டை திரும்ப எடுக்க இன்னும் ரூ.354 கோடி தேவை என்றும், அதுவரை முழுமையான சுங்கக் கட்டணம் தான் வசூலிக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கூறியுள்ள கணக்கு கந்து வட்டியை விட மிகவும் மோசமான கணக்கு ஆகும். நெடுஞ்சாலை அமைப்பதற்கான செலவு ரூ.536 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், அதைவிட கூடுதலாக ஒரு பைசா கூட செலவழிக்கப்படவில்லை. நெடுஞ்சாலை பணிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து முடிவடைந்த நாள் வரையிலான பணவீக்கத்தை கணக்கிட்டு தான் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கும். அந்த தொகை தான் ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டிருக்கும். அவ்வாறு இருக்கும் அத்தொகைக்கு பணவீக்கம் சேர்த்து புதிய தொகை நிர்ணயிப்பது நியாயமற்றது. அதுவும் திருத்தப்பட்ட மதிப்பீடு 2013-ஆம் ஆண்டில் தான் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையில் 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே திட்டச்செலவான ரூ.536 கோடியை விட அதிக தொகை வசூலிக்கப்பட்டிருக்கும். அதனால், சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படுவதை தவிர்க்கவும், தொடர்ந்து வாகன உரிமையாளர்களை சுரண்டவும் வசதியாகவே திட்ட மதிப்பீடு உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. இது நியாயமல்ல.

அதேபோல், கடந்த பதிமூன்றரை ஆண்டுகளில் சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.1098 கோடியில் ரூ.682 கோடியை, அதாவது மொத்த வசூலில் 63% தொகை பராமரிப்பு மற்றும் இயக்குதலுக்காக செலவாகிவிட்டது என்பதை ஏமாளிகள் கூட ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகள் மொத்த முதலீட்டை விட 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பரணூர், ஆத்தூர் ஆகிய இரு சுங்கச்சாவடிகளிலும் சேர்த்து பதிமூன்றரை ஆண்டுகளில் ரூ.1098 கோடி மட்டும் தான் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதையே நம்ப முடியவில்லை. இந்தக் கணக்கின்படி பார்த்தால் இரு சுங்கச்சாவடிகளிலும் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ. 11 லட்சம் மட்டுமே வசூலாகியிருக்கிறது. இந்த இரு சுங்கச்சாவடிகளிலும் சராசரியாக தினமும் ஒரு லட்சம் வாகனங்கள் செல்லும் நிலையில், இவ்வளவு குறைந்த தொகை தான் வசூலாகியிருக்கிறது என்ற கணக்கின் பின்னணியில் மர்மம் நிறைந்துள்ளது.

மொத்தத்தில் தாம்பரம் – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் சுங்கக்கட்டணம் வசூலிப்பதற்கு ஏற்ற வகையில் தான் கணக்குகள் காட்டப்படுகின்றன. இவற்றை மக்கள் மீதான பொருளாதாரத் தாக்குதலாகவே பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தாம்பரம் & திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் அவற்றை அமைப்பதற்காக ஆன உண்மையான செலவு, இதுவரை உண்மையாக வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் எவ்வளவு? என்பது குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) அலுவலக உயரதிகாரிகள் உள்ளிட்டோரைக் கொண்ட ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலித்து வரும் சுங்கச்சாவடிகளில், பராமரிப்புக் கட்டணமாக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வாகன உரிமையாளர்களையும்,பொது மக்களையும் கடுமையாக பாதிக்கும் இந்த முக்கிய விவகாரத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அளித்துள்ள இந்த ஆலோசனை மக்களை இது குறித்து சிந்திக்க வைத்துள்ளது.