மூலம்? இதை குணமாக்க “வெற்றிலை + விளக்கெண்ணெய்”.. போதும்!

Photo of author

By Divya

மூலம்? இதை குணமாக்க “வெற்றிலை + விளக்கெண்ணெய்”.. போதும்!

உடல் சூடு, மலச்சிக்கல், கார உணவு உள்ளிட்ட காரணங்களால் ஆசனவாய் பகுதியில் பைல்ஸ் ஏற்படுகிறது. பைல்ஸ்.. மலம் கழிக்கும் பொழுது அதிக எரிச்சல் மற்றும் வலியை கொடுக்கக் கூடியது. இதை குணமாக்க பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள்.

துத்தி கீரை
அகத்தி கீரை
சின்ன வெங்காயம்(நறுக்கியது)
பூண்டு(நறுக்கியது)
பசு நெய்

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 ஸ்பூன் சுத்தமான நெய் ஊற்றவும். அவை சூடானதும் அதில் துத்தி கீரை மற்றும் அகத்தி கீரை போட்டு வதக்கி கொள்ளவும்.

பிறகு சின்ன வெங்காயம் 5 முதல் 6(நறுக்கியது), பூண்டு 3 முதல் 4(நறுக்கியது) சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுத்துக் கொள்ளவும். இதை சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், பைல்ஸ், செரிமானக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.

வெற்றிலை
நல்லெண்ணெய்
விளக்கெண்ணெய்

ஒரு வெற்றிலை எடுத்து விளக்கண்ணெய் தடவி நல்லெண்ணயில் இதை சூடாக்கவும்.

வெற்றிலை மிதமான சூட்டில் இருக்கும் பொழுது ஆசனவாய் பகுதியில் மூலம் உள்ள இடத்தில் வைத்து ஒத்தடம் போல் கொடுக்கவும்.

இவ்வாறு செய்தால் ஆசனவாய் பகுதியில் வலி, எரிச்சல் அனைத்தும் குணமாகும். வலி நின்ற பின்னர் வெற்றிலையை எடுத்துவிட்டு ஆசனவாய் சுற்றி விளக்கெண்ணெய் தடவி விடவும். இவ்வாறு செய்து வந்தால் மூல நோய் புண்கள் ஆறும்.