மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

மண் பாத்திரத்தில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கிடைக்குமா?

பண்டைய காலத்தில் இருந்து மண் பாத்திரங்களின் பயன்பாடு உள்ளது. இவை மற்ற உலோக பாத்திரங்களை விட அதிக ஆரோக்கியம் நிறைந்தவை.

இதில் சமைக்கப்படும் உணவு அதிக சத்துக்கள் கொண்டவையாக இருப்பதினால் இன்றுவரை மண் பாத்திரங்களுக்கு தனி மதிப்பு இருக்கின்றது.

மண் பாத்திரங்களில் பல வடிவங்களில் பாத்திரங்கள் உள்ளன. முதலில் கிராமப்புற மக்களின் அடையாளமாக இருந்த இந்த பாத்திரம் தற்பொழுது நகர்ப்புற மக்களை வெகுவாக ஈர்த்து வருகின்றது.

மண் பாத்திரத்தில் சமைத்தால் தனி ருசி கிடைக்கும் என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

மண் பாத்திர உணவு உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்திகளை வழங்குகிறது.

நீண்ட ஆயுளுக்கு வழிவகை செய்கின்றது. உடலுக்கு தேவையான தாதுக்களை வழங்குகிறது.

மண் பானை உணவுகள் குடல் புண்ணை குணப்படுத்த உதவுகிறது.

அல்சர், வாய்ப்புண் இருப்பவர்களுக்கு மண் பானை உணவு சிறந்த தீர்வு.

மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்ட உணவு அஜீரணக் கோளாறை ஏற்படுத்தாது.

உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. மண்பானை நீர் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது.