மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!!

0
258
#image_title

மக்கள் பணத்தில் திமுக அரசு நடத்தும் ‘கார் ரேஸ்’..!! இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா..? பொளந்து கட்டிய மாஜி அமைச்சர்!!

மிக்ஜாம் புயலால் கடந்த ஒரு வார காலமாக தலைநகர் சென்னை மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி கிடக்கிறது. உண்ண உணவின்றி ஏழை, எளிய மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். நகரின் பெரும்பாலான இடங்களில் மின்சார சேவை வழங்கப்படாததால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஆற்று வெள்ளத்தை கடல் உள்வாங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வெள்ள நீர் தேங்கி நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். அதேபோல் பாம்பு, முதலை உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான உயிரினங்கள் தேங்கி கிடக்கும் மழை நீரில் மிதந்து செல்வதை அவ்வப்போது காண முடிகிறது. இதனால் வெளியில் வர முடியாமல் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சென்னை மக்கள் இவ்வளவு துயரை அனுபவிக்க ஆளும் திமுக அரசின் மெத்தன போக்கு தான் காரணம் என்று பலதரப்பில் இருந்து கண்டனக் குரல் எழுந்து வருகிறது.

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் சென்னைக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் திமுக அரசு அதை மெத்தன போக்கில் கையாண்டதால் தான் இன்று சென்னைக்கு இப்படி ஒரு நிலைமை என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சட்டி இருக்கிறார்.

மழை வெள்ளத்தை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் மீண்டும் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தற்பொழுது இப்படி ஒரு பேரிடர் சூழல் ஏற்பட்டு இருக்கும் நிலையில் ஆளும் திமுக அரசு இதில் எல்லாம் தனது கவனத்தை செலுத்தாமல் ரூ.242 கோடி செலவில் சென்னையில் கார் ரேஸ் நடத்துவதில் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறது. இந்த 242 கோடி ரூபாய் என்ன உங்கள் அப்பன் வீட்டு பணமா? நம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கூலித் தொழிலாளியின் வியர்வையில் உருவான பணம். அவர்கள் கொடுக்கின்ற வரிப் பணம் இது.

இந்த வரிப் பணத்தை மக்கள் நலனுக்காக செலவிடவது தான் அரசின் கடமை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தனது குடும்பத்தை மகிழ்விப்பதற்காக மக்கள் பணத்தை வைத்து கார் ரேஸ் நடத்துகிறார். ஒருபுறம் மக்கள் புயல் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இவர்களுக்கு மக்கள் பணத்தில் கார் ரேஸ் பந்தயம் கேட்குதா? என்று சி.வி.சண்முகம் அவர்கள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Previous articleமிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!
Next articleமக்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்.. ரேசன் கார்டு குறித்து புது அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!!