மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!

0
90
#image_title

மிக்ஜாம் புயல் ஆட்டம் இன்னும் முடியல.. சில மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை கன்பார்ம்!!

தமிழகத்தின் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை ஒரு பதம் பார்த்து விட்டது. தொடர் கனமழையால் சென்னையில் மழைநீர் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மழை நீர் வடிய தாமதமான சூழல் ஏற்பட்டு இருப்பதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலத்தின் ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் கரையை கடந்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.