ராமேஸ்வரம் கடற்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காக்க உருவாக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் !!

ராமேஸ்வரம் கடற்பகுதி அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை காக்க உருவாக்கப்படும் செயற்கை பவளப்பாறைகள் !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பகுதியில் வாழும் அரியவகை கடல்வாழ் உயிரினங்களை காக்க ரூ.3.கோடி செலவில் மீன்வளத் துறையினர் சார்பாக செயற்கை பவளப்பாறைகள் அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா, கடல் பகுதியில் அதிக வகையான கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர். அதில் 117 வகையான பவளப்பாறைகள் காணப்படுகிறது. டால்பின் ,கடல் பசு ,கடல் ஆமைகளும் என 500-க்கும் மேற்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் பவளப்பாறைகளை சார்ந்தே வாழ்ந்து வருகின்றது. மீன்களின் உறைவிடமாக விளங்கிவரும் … Read more

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருக்கும்  மாவட்டங்கள்!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருக்கும்  மாவட்டங்கள்!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருக்கும்  மாவட்டங்கள்!! தெற்கு ஆந்திரா வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்,ராணிப்பேட்டை, திருவள்ளூர்,திருப்பத்தூர், நீலகிரி,வேலூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும்,கிருஷ்ணகிரி,தருமபுரி, சேலம்,கடலூர், திருவண்ணாமலை,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் … Read more

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை !

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை !

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சலுகை விலையில் நூல்கள் விற்பனை ! பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதியன்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறையில் 50 சதவீத தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் கு. சின்னப்பன் கூறியதாவது: தமிழ்ப்பல்கலைக்கழக நிறுவன நாள் மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள் 50 விழுக்காடு சிறப்புத் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வது தொடர்ந்து நடந்து … Read more

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்!

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்!

பத்தாம் வகுப்பு மாணவனை சரமாரியாக வெட்டிய ரவுடி கும்பல்! தெருவில் செல்போன் பார்த்துக்கொண்டிருந்த பத்தாம் வகுப்பு மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவருடைய மகன் தியாகு. தியாகு பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். தியாகு நேற்று முன்தினம் தனது வீட்டின் வெளியே உட்கார்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார். அந்த வழியில் இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் சென்றுள்ளனர். … Read more

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் படியுங்கள் !! முக்கிய தகவல்

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் படியுங்கள் !! முக்கிய தகவல்

  மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நாடு முழுவதும் நடக்க இருக்கிறது.இந்த தேர்வானது கடந்த மே மாதமே நடக்கவிருந்த நிலையில் கொரோனா முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, நாளை நடக்க இருக்கிறது..இந்தத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் கோரிக்கை வைத்த நிலையிலும் ,எதிர்ப்பையும் மீறி நாளை தேர்வு நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாளை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நீட் தேர்வு நடக்க உள்ளது. இந்தத் தேர்வுக்கு … Read more

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை!

தமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கட்டமைப்பு வசதி இல்லாத, ஆசிரியா் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 58 கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய ஆசிரியா் கல்விக் குழுமம் ரத்து செய்ததுடன் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் இணைப்பு அனுமதி பெறாத 13 பி.எட். கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 71 … Read more

வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் காதலி எடுத்த அதிரடி முடிவு !!

வேரோரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் காதலி எடுத்த அதிரடி முடிவு !!

புதுச்சேரி அருகே தன் காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தால் மனமுடைந்த காதலி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சேதாப்பட்டை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர், கல்லூரி மாணவி காயத்ரி என்பவரை காதலித்து வந்துள்ளார் .இவ்விருவரும் காதலித்து வந்த நிலையில் ,சரவணன் பெற்றோர்களுக்கு காதல் விவகாரத்தை பற்றி தெரியவந்தது .இதனால் சரவணன் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இதற்காக அவசர அவசரமாக சரவணனுக்கு வேறு ஒரு பெண்ணை … Read more

உங்கள் ஊரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றி தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் !!

உங்கள் ஊரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றி தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் !!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று (12.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.86- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.93 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.85-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.26-கும் விற்கப்படுகிறது. கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.46-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.88- க்கும் விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா; 1,201 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா; 1,201 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,59,985 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,201 பேர் கொரோனா தொற்று காரணமாக பலியாகிய நிலையில் பலி எண்ணிக்கை 77,472 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குணமடைந்து வீடு … Read more

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது!

மதுரையில் சோகம்! மீண்டும் ஒரு மாணவி நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழப்பு:! அவர் எழுதி வைத்த கடிதம் அனைவரின் நெஞ்சையும் உழுக்குகின்றது! நாளை நீட் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில்,நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த 19 வயது மாணவி,நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக்கொண்டார். மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் முருகசுந்தரம். இவர் காவல்துறை எஸ்.ஐ. ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் 6வது சிறப்பு பட்டாலியன் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவரது மகள் … Read more