சளி தொல்லை? இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

0
146
#image_title

சளி தொல்லை? இதை ஒரு கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

நன் அனைவரையும் எளிதில் பாதித்து விடும் நோய்களில் ஒன்றாக சளி பாதிப்பு இருக்கிறது.
இவை வைரஸ் தொற்றால் ஏற்படுபவையாக உள்ளது. முதலில் சாதாரண சளி பாதிப்பாக உருவாகி பின்னர் இருமல், நெஞ்சு சளி, காய்ச்சல் என ஏற்பட்டு நம்மை படுத்தி எடுத்துவிடும்.

சளியால் ஏற்படும் பாதிப்பு:-

*ஆஸ்துமா

*மூக்கில் அலர்ஜி

*சைனஸ் பாதிப்பு

*மூச்சிரைப்பு

சளி தொல்லை நீங்க இயற்கை வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சின்ன வெங்காயம் – 2

*எலுமிச்சை சாறு

*தேன் – 1 தேக்கரண்டி அளவு

செய்முறை:-

இரண்டு சின்ன வெங்காயம் எடுத்து தோலை நீக்கி தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளவும். இதை ஒரு உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும். அடுத்து ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதனை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

அதில் பாதி எலுமிச்சை எடுத்து சாறு பிழிந்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.

பின்னர் இடித்து வைத்துள்ள சின்ன வெங்காயம் சேர்த்துக் கொதிக்க விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். அடுத்து அதில் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாற்றில் 1 தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். சுவைக்காக சிறிதளவு தூயத் தேன் சேர்த்து கலந்து பருகவும். இவ்வாறு செய்து பருகினால் சளி தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

Previous articleஜாமுன்: சர்க்கரை நோய் முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களுக்கும் தீர்வு இந்த ஒரு பழம்!!
Next articleமுகம் அழகு பெற “தக்காளி + பச்சை பயறு” இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்!!