கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் மரணம் ! அதிர்ச்சியில் பயணிகள் !

0
210
Conductor Rajendran died after tripping and falling down! Passengers in shock!
Conductor Rajendran died after tripping and falling down! Passengers in shock!

கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் மரணம் ! அதிர்ச்சியில் பயணிகள் !

இன்று காலை சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று அஸ்தம்பட்டி, கோரிமேடு வழியாக செட்டிசாவடி பகுதிக்கு சென்றது. பின்னர் அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, பஸ் புறப்பட்டு சேலம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்தது. இந்த பஸ்சை டிரைவர் சீனிவாசன் ஓட்டினார். கண்டக்டர் ராஜேந்திரன் (54) பயணிகளிடம் டிக்கெட் எடுத்துவிட்டு பஸ்சுக்குள் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் பஸ் முன்பகுதி படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். காலை 9 மணி அளவில் பஸ் வந்தபோது நாய் ஒன்று சாலையின் குறுக்கே திடீரென ஓடியது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க வேண்டி டிரைவர் சீனிவாசன், பஸ்சை இடதுபுறமாக திருப்பி பிரேக் போட்டார். அப்போது கண்டக்டர் ராஜேந்திரன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனடியாக கீழே இறங்கி அவரை காப்பாற்ற முயன்றபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திரன் இறந்த தகவல் குறித்து அவர் குடும்பத்தரிடம்  தெரிவிக்கப்பட்டது. ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்த அவர்கள், ராஜேந்திரன் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Previous articleகல்லூரி மாணவர்களை தொடர்ந்து கஞ்சா போதை பொருட்களுக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்!..தடம் மாறும் சிறுவர்களின் அதிர்ச்சி பின்னணி!!
Next articleபைக் மற்றும் லாரி மோதி விபத்து! இரண்டு கல்லூரி மாணவர்கள் பலி ஒருவர் கவலைக்கிடம்?