மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!!

Photo of author

By Divya

மலச்சிக்கல்? 1 மணி நேரத்தில் உடலில் உள்ள மொத்த மலமும் வெளியேற பாட்டி வைத்தியம்!!

இன்றைய கால வாழ்க்கை சூழலில் ஆரோக்யமான உணவு உண்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளது.நாம் உண்ணும் அரிசி,காய்கறி,பழங்கள் என்று அனைத்திலும் இரசாயனங்கள் நிறைந்து விட்டது.வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண தொடங்கி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி விடுகிறோம்.

இந்த ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தி மலச்சிக்கல் பாதிப்பில் கொண்டு சேர்த்து விடுகிறது.அதேபோல் நாள் தோறும் காலை கடனை தவறாமல் முடித்து விட வேண்டும்.இல்லையென்றால் அவை மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.இதை உடனடியாக சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகளை பாலோ செய்யுங்கள்.உடனடி தீர்வு கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி – 1 துண்டு

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 3

*சீரகம் – 1/4 தேக்கரண்டி

*விளக்கு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி அளவு வெந்தயம் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு துண்டு இஞ்சி எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பின்னர் அதை ஒரு காய் சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும்.

பின்னர் அதை வெந்தயம் வைத்துள்ள பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து 3 கருப்பு மிளகு எடுத்து உரலில் போட்டு தட்டி கொள்ளவும்.அதேபோல் சீரகம் 1/4 தேக்கரண்டி எடுத்து அதில் சேர்த்து தட்டி ஏற்கனவே எடுத்து வைத்துள்ள வெந்தயத்தில் சேர்த்து கொள்ளவும்.

பிறகு 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.இதையடுத்து 1 தேக்கரண்டி விளக்கு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி வெறும் வயிற்றில் பருகவும்.இவ்வாறு செய்தால் உடலில் தேங்கி கிடந்த மலம் முழுவதும் உடனடியாக வெளியேறி விடும்.

மற்றொரு தீர்வு:-

ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் சோம்பு 1 ஸ்பூன் மற்றும் மிளகு 1/2 ஸ்பூன் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள சோம்பு + மிளகு பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

கொதிக்கும் பொழுது சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளில் 1/4 ஸ்பூன் எடுத்து அதில் சேர்க்கவும்.அதன் பின் 2 டம்ளர் தண்ணீர் 1 டம்ளராக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும்.

பிறகு அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும்.தேவைப்பட்டால் சுத்தமான தேன் 1 ஸ்பூன் கலந்து பருகலாம்.இந்த பானம் வயிற்றில் அடைபட்டு கிடந்த நாள்பட்ட மலங்களை 1 மணி நேரத்தில் முழுமையாக வெளியேற்றி விடும்.