நாட்டில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

0
243

நாட்டில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்று பாதிப்பு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று 9195 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் சென்ற 24 மணிநேரத்தில் 13 ஆயிரத்து 154 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் 82602 பேர் இந்த நோய்த்தொற்றின் சிகிச்சையோடு இருக்கிறார்கள் இது 0.24 சதவீதம் ஆகும் என்று சொல்லப்படுகிறது, இதுவரையில் இந்த நோய் தொற்றுக்கு 268 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 860 ஆக அதிகரித்திருக்கிறது. 3 கோடியே 42 லட்சத்து 58 ஆயிரத்து 778 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள், இது98.38 சதவீதம் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில வாரங்களாக நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த சூழ்நிலையில், இன்று அது 10 ஆயிரத்தை கடந்து இருக்கிறது என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.

Previous articleபுத்தாண்டின் போது இதை செய்தால் அதிரடி கைது! சைலேந்திரபாபு கடுமையான எச்சரிக்கை!
Next articleதிருச்சியில் பல முக்கிய திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here