மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

0
32
#image_title

மீதமான சாதத்தில் 10 நிமிடத்தில் சுவையான மொறு மொறு தோசை!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

வீட்டில் மீந்து போன சாதம் இருந்தால் அவற்றை தூக்கி எரிவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளோம்.ஒரு சிலர் அதில் தாளிப்பு சாதம் செய்து உண்பார்கள்.இவ்வாறு பழைய சாதத்தில் ஒரு சில உணவு பொருட்கள் மட்டும் தான் தயாரித்து உண்ண முடியும் என்று நினைத்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு அதில் சுவையான தோசை செய்து சாப்பிட முடியும் என்பது தெரியவில்லை.இவ்வாறு மீந்து போன சாதத்தில் ரவை,தயிர் சேர்த்து மொறு மொறுனு வாயில் வைத்தால் கரையும் தோசை செய்வது எப்படி என்ற செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

*மீந்து போன சாதம் – 1 கப்

*ரவை – 1 கப்

*தயிர் – 1 கப்

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

1.ஒரு பாத்திரத்தில் மீந்து போன சாதம்,ரவை,தயிர் உள்ளிட்டவற்றை சேர்த்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.வறுத்த அல்லது வருக்காத ரவை எது வேண்டுமானாலும் சேர்த்து கொள்ளலாம்.

2.அவற்றை 15 நிமிடங்கள் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

3.பின்னர் அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ள வேண்டும்.

4.அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடேறியதும் ஒரு குழி கரண்டி மாவு எடுத்து அதில் ஊற்றி தோசை வார்த்து கொள்ள வேண்டும்.அதில் 1 ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும்.

5.இந்த தோசைக்கும் கடலை சட்னி காமினேஷன் நன்றாக இருக்கும்.