காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

0
60
#image_title

காலை உணவில் ராகி சப்பாத்தி உண்டு வருவதால் கிடைக்கும் அற்புத பயன்கள்!

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்திய உணவுப் பட்டியலில் ராகி அதாவது ஆரிய மாவு முக்கிய இடம் வகித்து வந்தது.காலப்போக்கில் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு தற்பொழுது சுவைக்காக உணவுகளை எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகிவிட்டது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு வந்து விட்டோம்.இந்நிலையில் மீண்டும் நம் பாரம்பரிய மிக்க உணவுகளை எடுத்து வந்தோம் என்றால் இழந்த சத்துக்களை திரும்ப பெறுவதற்கான வழி பிறக்கும்.

இந்த ராகியில் அதிகளவு கால்சியம்,பாஸ்பரஸ்,பொட்டாசியம்,இரும்பு போன்ற தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளது.பால் பிடிக்காதவர்கள் இந்த ராகி மாவில் கூல் செய்து குடித்து வரலாம்.ஏனெறால் பாலுக்கு நிகரான சத்துக்கள் ராகியில் இருக்கின்றது.ராகியில் அடை,தோசை,இனிப்பு உருண்டை,பூரி,புட்டு,சப்பாத்தி,களி போன்ற பல்வேறு வகையான உணவுகளை செய்து சாப்பிடலாம்.

ராகி சப்பாத்தி செய்யும் முறை

தேவையான பொருட்கள்:-

ராகி மாவு – 1 கப்

தூள் உப்பு – 1/2 ஸ்பூன்

எண்ணெய் – 1/4 ஸ்பூன்

செய்முறை:-

1. ஒரு கடாயில் 1 1/4 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் தூள் உப்பு,எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.

2.தண்ணீர் சூடானதும் அதில் 1 கப் ராகி மாவு சேர்த்து நன்கு கிளறி விடவேண்டும்.மாவு நன்கு மிக்ஸ் ஆனதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.பிறகு ஒரு ப்ளேட் கொண்டு கடாயை மூட வேண்டும்.

3.ராகி மாவு ஆறிய பிறகு மாவு நன்கு மிருதுவாக மாறும் வரை கையால் பிசைந்து கொள்ள வேண்டும்.பிறகு உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்.

4. ராகி உருண்டைகளை உருட்டி தோசை கல்லில் போட்டு குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதன் மூலம் எலும்புகளுக்கு நல்ல பலம் கிடைக்கும்.உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகள் விரைவில் குணமாகும்.