சர்க்கரை நோயை கட்டுப்படும் திணை அரிசி இட்லி – எப்படி செய்வது?

0
139
#image_title

சர்க்கரை நோயை கட்டுப்படும் திணை அரிசி இட்லி – எப்படி செய்வது?

திணை பயன்கள்

தினையில் புரத சத்துகள், ஊட்டச்சத்துகள் நிறைந்து காணப்படுகிறது. திணை சிறுதானியம் வகையைச் சேர்ந்தது. இதை சைனீஸ் மில்லட், ஜெர்மன் மில்லட், ஹங்கேரியன் மில்லட் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.

மேலும், திணையில் நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. திணையை சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.

சரி.. திணை இட்லி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் –

தேவையான பொருள்கள்

திணை அரிசி – 2 கப்

உளுத்தம் பருப்பு – 1 கப்

இட்லி அரிசி – 2 கப்

வெந்தயம் – 1 ஸ்பூன்

இஞ்சி – சிறிதளவு

கடுகு – சிறிதளவு

கருவேப்பில்லை – தேவையான அளவு

துருவிய கேரட் – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கடலைப் பருப்பு – சிறிதளவு

செய்முறை

முதலில் திணை அரிசி, உளுத்தம் பருப்பு, இட்லி அரிசி, வெந்தயம் ஆகியவற்றை சுத்தம் செய்து நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர், ஊறிய அரிசியை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன் பின்னர், அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்க வேண்டும்.

மாவு புளித்ததும், ஒரு பாத்திரத்தில் சிறிது கடுகு, கடலை பருப்பு , இஞ்சி, கருவேப்பில்லை, கொத்தமல்லி, துருவிய கேரட் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள மாவில் சேர்க்க வேண்டும்.

மாவில் நன்றாக கலந்த பிறகு மாவினை இட்லித் தட்டில் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்தால் சு

வையான சத்தான திணை இட்லி ரெடி.

Previous article2 நிமிடத்தில் மலசிக்கல் பாதிப்பு நீங்க இந்த முறையை பாலோ பண்ணுங்க!! அனுபவ உண்மை!
Next articleஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!