சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..!

Photo of author

By Divya

சர்க்கரை நோய்: இந்த மூன்று பொருட்களை இப்படி பயன்படுத்தினால் உடனடி பலன் கிடைக்கும்..!

இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழலில் நம் உடல் ஆரோக்கியத்தின் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு செய்யத் தவறினால் உயிருக்கு உலை வைக்கும் நோய்களை எளிதில் சந்திக்க நேரிடும்.

அதிலும் சர்க்கரை நோய் ஆளையே உருக்கிவிடும். இந்த சர்க்கரை நோய் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ளவும், சர்க்கரை இருப்பவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும்… பாகற்காய், வெண்டைக்காய், கேரட் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பாகற்காய்
2)வெண்டைக்காய்
3)கேரட்

செய்முறை:-

ஒரு முழு பாகற்காயை சிறு துண்டாகளாக நறுக்கி அதன் விதையை நீக்கிவிடவும்.

அடுத்து 5 அல்லது 6 வெண்டைக்காயை காம்பு நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

அதேபோல் ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இந்த மூன்று காய்கறிகளையும் ஒரு வெள்ளை காட்டன் துணியில் போட்டு வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து காயவைத்த இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

ஒரு ஈரமில்லாத காற்று புகாத டப்பாவில் இந்த பொடியை போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள பொடி 1 ஸ்பூன் அளவு சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.