30% , 45% என பிரித்து வசூலிக்க வேண்டும்! மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் திட்டவட்டம்!

0
211

தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவருக்கும் தேர்ச்சி என்று இருக்குமே தவிர மதிப்பெண்கள் இருக்காது என முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மதிப்பெண்களின் அடிப்படையில் தான் அடுத்த வகுப்பு சேர்வதற்கான அடிப்படை என்று இருந்தும் மதிப்பெண்கள் குறிப்பிட படாது என்று சொல்வது எவ்விதத்தில் சாத்தியம் என்று தெரியவில்லை.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பதினோராம் வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் இன்னும் கணிக்க படாத நிலையில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

தளர்வுல்லாத 11 மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை இல்லை. அதே போல் மற்ற மாவட்டத்தில் கொரோனா காலத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் அனைவரும் விதி முறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் இப்பொழுது இருக்கும் நிலையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் எடுப்பது குறித்து யோசிக்கவில்லை. அதேபோல தொலைக்காட்சி அல்லது வாட்ஸ்அப் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் முறையே தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை இன்னும் ஒரு வாரத்தில் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் அனைவருக்கும் தேர்ச்சி என்று இருக்கும் ஆனால் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டு இருக்காது என்று முதல் கட்ட பேச்சுவார்த்தையில் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல் தனியார் பள்ளிகள் 75 சதவீதம் மட்டுமே கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும். அதுவும் 30% 45% என இரண்டு தவணைகளாக பிரித்து வசூலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்குமேல் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலித்தால் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் அன்பில் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Previous articleகொரோனா நோயாளி தற்கொலை! திருவாரூரில் பரபரப்பு!
Next articleSBI வங்கியில் கொரோனா 5 லட்சம் கடனுக்கு இவர்களும் விண்ணப்பிக்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here