அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

0
205

அனைத்து நேரத்திலும் கட்சித்தாவல் இருக்கும் என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இவை அனைத்து கட்சிகளுக்குமே நடைபெறும் ஒன்றுதான் ஆனாலும் தங்களுடைய கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தரப்பில் தாவி இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.

இந்த விவகாரத்தை கண்டித்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆர்ப்பாட்டம் முதல்கொண்டு நடத்திப்பார்த்தார் அதன் பிறகும் கட்சியின் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன இப்போது ஓரளவிற்கு சுவரொட்டிகளை அகற்ற அனுமதி கொடுத்திருக்கின்றது காவல்துறை.

சுவரொட்டிகள் விவகாரத்தில் இருந்து அமைச்சர் வேலுமணி தாக்கிப் பேசி வருகின்றது திமுக நிழல் முதல்வர் என எஸ் பி வேலுமணி என தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் ஆளும் தரப்பின் பக்கம் சென்றுவிட்டதால் தான் எதிர்க்கட்சியினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம் வடவள்ளி எம்ஜிஆர் மன்றத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சதீஷ் ஆகிய சிலர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவின் கோயம்புத்தூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கோவை வடக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி ஜி ஆர் அருண்குமார் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் முன்னிலையில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள்.

Previous articleதடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!
Next articleபாஜகவின் திட்டத்தை தவிடு பொடியாக்கிய கம்யூனிஸ்ட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here