1 மணி நேரத்தில் சளி காய்ச்சல் குணமாக இதை செய்து குடிங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

0
113
#image_title

1 மணி நேரத்தில் சளி காய்ச்சல் குணமாக இதை செய்து குடிங்கள்!! 100% பலன் கொடுக்கும்!!

கண்டத்திப்பிலி ஒரு அற்புத மூலிகை ஆகும்.இவை எடை இழப்புக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.இவை உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சு கழிவுகளை அகற்றும் பண்பை கொண்டிருக்கிறது.அதுமட்டும் இன்றி பசியை மேம்படுத்துதல்,செரிமான அமைப்பை பாதுகாக்கத்தால்,சளி,காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த கண்டத்திப்பிலி சிறந்த தீர்வாக இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*கண்டதிப்பிலி இலை – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)

*புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு

*நெய் – 1/4 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி

*கடுகு – 1/4 தேக்கரண்டி

*ரசப்பொடி – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுல் எடுத்து அதில் ஒரு எலுமிச்சம் பழ அளவு புளியை சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1/4 தேக்கரண்டி நெய் ஊற்றவும்.அவை சூடேறியதும் அதில் 1/4 தேக்கரண்டி கடுகு சேர்த்து பொரிய விடவும்.

பின்னர் கரைத்து வைத்துள்ள புளி கரைசல் சேர்த்து கொள்ளவும்.அடுத்ததாக தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.பிறகு ரசப்பொடி 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்த்து கலக்கி விடவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள கண்டதிப்பிலி இலைகளை சேர்த்து அதனுடன் 1/4 தேக்கரண்டி பெருங்காயம் சேர்த்து ஒரு கொதி வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.இந்த கண்டதிப்பிலி இலை ரசம் சளி,இருமல்,காய்ச்சல் உள்ள பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

Previous articleஒரு மாதத்தில் “பாத வெடிப்பு” நீங்க வேண்டுமா? இதை மட்டும் பாலோ பண்ணுங்க!!
Next articleகழுத்து பகுதியை சுற்றியுள்ள அழுக்கு படிந்த கருமை நீங்க வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!