சொத்தை பல்லில் உள்ள புழுக்கள் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!!

Photo of author

By Divya

சொத்தை பல்லில் உள்ள புழுக்கள் வெளியேற இவ்வாறு செய்யுங்கள்!!

நவீன கால உணவுமுறை பழக்கத்தால் பலருக்கும் சொத்தைப்பல் எளிதில் ஏற்பட்டு விடுகிறது.
தினமும் காலை மற்றும் இரவு என இருமுறை பல் துலக்குவது வேண்டும். உணவு உட்கொண்ட பின்னர் பற்களை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்கள் விரைவில் சொத்தையாக்கி விடுகிறது.

அதுமட்டும் இன்றி அதிகம் இனிப்பு உண்ணுதல், பற்களை முறையாக துலக்காதது, குளிர்ந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல் உள்ளிட்டவைகளாலும் பற்கள் எளிதில் சொத்தையாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு

*மஞ்சள்

*குப்பைமேனி இலை சாறு

செய்முறை:-

முதலில் 2 பல் பூண்டை தோல் நீக்கி இடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து 2 ஸ்பூன் குப்பைமேனி இலை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த சாற்றில் காட்டன் பஞ்சை நினைத்து சொத்தைப்பல் இருக்கும் இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்தால் சொத்தைப்பல்லில் உள்ள புழுக்கள் சில நிமிடங்களில்
வெளியேறி விடும்.