உடலில் தேங்கி உள்ள நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

0
227
#image_title

உடலில் தேங்கி உள்ள நாள்பட்ட சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

தற்பொழுது குளிர்காலம் தொடங்கிவிட்டது. அதுமட்டும் இன்றி தொடரந்து மழை பெய்து வருகிறது. இதனால் சளி, காய்ச்சல், மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும். இதனை சரி செய்ய வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி கசாயம் செய்து சாப்பிடுங்கள்.

தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உள்ளிட்டவை உடலில் அதிகப்படியான சளி தேங்கி இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

தேவையான பொருட்கள்:-

*சுக்கு

*வெற்றிலை

*சீரகம்

*கற்பூரவல்லி

*இஞ்சி

*மிளகு

*தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் இஞ்சி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை இடித்து சேர்த்துக் கொள்ளவும். அடுத்து கற்பூரவல்லி மற்றும் வெற்றிலையை அதில் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும். பின்னர் அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். இதை காலை நேரத்தில் பருகி வருவதன் மூலம் உடலில் தேங்கி கிடந்த சளி முழுவதும் கரைந்து நாசி மற்றும் மலம் வழியாக வெளியேறி விடும்.