கருமை உதடு சிவக்க இப்படி செய்யுங்கள்!! ஒரே நாளில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!
நம்மில் பலர் உதடுகள் கருமை நிறத்தில் வறண்டு காணப்படும். இதை சரி செய்ய இரசாயான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி அறியாதோர் ஏராளம் என்று சொல்லலாம்.
கருப்பு உதட்டை பிங்க் நிறத்திற்கு மாற்ற இயற்கை முறையிலும் தீர்வு காணலாம். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.
தேவையான பொருட்கள்:-
*வெள்ளை சர்க்கரை – 1 தேக்கரண்டி
*வாசலின் – 1 தேக்கரண்டி
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் சுத்தமான கிண்ணம் ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி வாசலின் மற்றும் அரை எலுமிச்சை பழ சாறு ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும்.
பிறகு உதட்டின் மேல் நன்றாக ஸ்க்ரப் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உதடுகளின் மேல் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறி அவை மிருதுவாக மாறும். எலுமிச்சை சாறு உதட்டில் இருக்கும் கருமையை நீக்க உதவும். இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இயற்கை முறையில் உதடுகளை நல்ல நிறத்திற்கு மாற்ற முடியும்.