மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

0
32
#image_title

மலச்சிக்கல்? நாள்பட்ட மலம் முழுவதும் வெளியேற இதை 1 கிளாஸ் பருகுங்கள்!!

நம்மில் பெரும்பாலானோர் சந்தித்து வரும் பாதிப்புகளில் ஒன்று மலசிக்கல். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மலத்தை முறையாக வெளியற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை நாளடைவில் மலச்சிக்கலாக மாற அதிக வாய்ப்பு இருக்கிறது.

மலச்சிக்கல் ஏற்பட காரணம்:-

*தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை

*மலத்தை முறையாக கழிக்காமல் அடக்கி வைப்பது

*குறைந்த நார்ச்சத்து உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்வது

*முறையற்ற தூக்கம்

தேவையான பொருட்கள்:-

*மோர் – 1 டம்ளர்

*சீரகத் தூள் – 1/4 தேக்கரண்டி

*ஓமம் -1/4 தேக்கரண்டி

*பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை

*உப்பு – சிறிதளவு

செய்முறை :-

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1/4 தேக்கரண்டி ஓமம் சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்கவும். பின்னர் ஒரு டம்ளர் மோரில் 1/4 தேக்கரண்டி சீரகத் தூள், சிட்டிகை அளவு பெருங்காயத் தூள் சேர்த்து கலக்கவும்.

அடுத்து வறுத்து வைத்துள்ள ஓமம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து பருகவும்.

இவற்றை காலை மற்றும் இரவு உணவை எடுத்து கொள்வதற்கு முன் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நாள்பட்ட மலச்சிக்கல் பாதிப்பு நீங்கும்.

குறிப்பு:-

மோரில் ப்ரோபையோட்டிக் பாக்டீரியா இருக்கின்றது.இது நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிக்க செய்ய உதவுகின்றது.

சீரகம் நம் வயிறு மற்றும் உடலின் செரிமான அமைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துகின்றது. மேலும் அல்சரால், வயிற்று வலி, மலசிக்கல், செரிமான பிரச்சனை உள்ளிட்டவற்றை போக்கும்.

ஓமத்தில் உள்ள தைமூல் நாம் சாப்பிட கூடிய உணவை சீக்கிரம் செரித்து விடுகின்றது.

பெருங்காயத்தூள் உணவு பாதையில் இருக்கின்ற புண்கள் அனைத்தையும் குணப்படுத்துகின்றது.