வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!!

Photo of author

By Divya

வயிற்றில் ஒரே எரிச்சலா இருக்கிறதா? இதை சரி செய்ய இது தான் பெஸ்ட் தீர்வு!!

உங்கள் வயிற்றுப் பகுதியில் அதிகப்படியான எரிச்சல் இருந்தால் அதை குணப்படுத்த வெள்ளை பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இந்த காய் குளிர்ச்சி நிறைந்தவை.அதிக நீர்ச்சத்து கொண்ட இந்த பூசணிக்காயை சாப்பிடுவதன் மூலம் வயிறு எரிச்சல் முழுமையாக குணமாகும்.

வெள்ளை பூசணி துண்டு – 1 கப்
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
சாம்பார் வெங்காயம் – 8 முதல் 10
எண்ணெய் – 1 தேக்கரண்டி

பருப்பு சாம்பாரின் ருசியை அதிகரிக்கும் சாம்பூசணியை தான் வெள்ளை பூசணி என்று அழைக்கின்றோம்.இந்த பூசணிக்காயை தோல் நீக்கி விட்டு அதன் சதை பற்று மட்டும் ஒரு கப் அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சின்ன வெங்காயம் 8 முதல் 10 வரை எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளை பூசணி துண்டுகளை போட்டு வதக்கவும்.

பின்னர் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.பூசணிக்காய் நன்கு வெந்து வந்ததும் சுவைக்காக 1 தேக்கரண்டி மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட்டு குடிக்கவும்.இந்த வெள்ளை பூசணி சூப் வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.