வயிற்றில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறதா? அப்போ இந்த காயை பொடி செய்து சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

வயிற்றில் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறதா? அப்போ இந்த காயை பொடி செய்து சாப்பிடுங்கள்!!

உங்களில் பலர் அடிக்கடி வயிறு எரிச்சல் உணர்வை சந்தித்து இருப்பீர்கள்.உரிய நேரத்தில் உணவு உண்ணாமை,உணவை தவிர்த்தல்,காரம் நிறைந்த உணவை உண்ணுதல் போன்ற பல்வேறு காரணங்களால் வயிறு எரிச்சல் உண்டாகிறது.இந்த வயிறு எரிச்சல் பாதிப்பில் இருந்து முழுமையாக மீள இந்த கை வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)சுண்டைக்காய்
2)மோர்
3)வெந்தயம்

பச்சை சுண்டைக்காய் ஒரு கப் அளவு எடுத்து நன்கு வற்றல் போல் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த சுண்டைக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் வாணலி வைத்து 2 தேக்கரண்டி வெந்தயம் போட்டு மிதமான தீயில் கருகிடாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த வெந்தயத்தை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

சுண்டைக்காய் பொடி மற்றும் வெந்தய பொடியை நன்கு கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு கிளாஸில் மோர் ஊற்றி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கலக்கி குடிக்கவும்.இதை காலை மலை என இருவேளையும் தொடர்ந்து குடித்து வந்தால் வயிறு எரிச்சல் குணமாகும்.அதுமட்டும் இன்றி அல்சர்,உடல் சூடு,வாயுத் தொல்லைக்கு சிறந்த தீர்வாக இந்த மோர் இருக்கிறது.