அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!!

அடிக்கடி சூட்டு கொப்பளம் வந்து உங்களை படுத்தி எடுக்கிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்கள்!!

உடலில் சூடு அதிகமானால் ஆங்காங்கே கொப்பளங்கள் தென்பட தொடங்கும்.இந்த கொப்பளங்கள் அதிக வலி மற்றும் எரிச்சலை உண்டாக்க கூடியவையாக இருப்பதினால் அவை குணமாகும் வரை நம்மை படுத்தி எடுத்து விடும்.இதை சில தினங்களை சரி செய்ய இயற்கை வழிகளை பாலோ செய்யுங்கள்.உடனடியாக உரிய பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள் – 1/2 தேக்கரண்டி

*கற்றாழை – 1/2 தேக்கரண்டி

*சந்தனம் – 1தேக்கரண்டி

*தயிர் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளவும்.அதில் 1 தேக்கரண்டி வாசம் நிறைந்த சந்தனம் சேர்த்துக் கொள்ளவும்.பின்னர் 1 துண்டு கற்றாழை எடுத்து அதன் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல்லை மட்டும் எடுத்து சந்தனம் வைத்துள்ள பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.இதனை நன்கு கலக்கி விடவும்.

பின்னர் அதில் தயிர் 1/2 தேக்கரண்டி அளவு சேர்த்து மீண்டும் கலக்கி விடவும்.இதை தொடர்ந்து அதில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழப்பிக் கொள்ளவும்.

இந்த கலவையை உடலில் சூட்டு கொப்பளங்கள் இருக்கும் இடத்தில் தடவி விடவும்.இதை இரவு நேரத்தில் பயன்படுத்தினால் விரைவில் அந்த கொப்பளங்கள் ஆறும்.

*சூட்டு கொப்பள பாதிப்பை சரி செய்ய நாம் உபயோகித்த கற்றாழை, சந்தனம் இயற்கையாவே குளிர்ச்சி தன்மையை கொண்டது.

*மஞ்சள் தூள் இயற்கையாகவே ஆன்டி-பாக்டிரியல் தன்மையை கொண்டது.இவற்றில் கொப்பளங்களின் மேல் தடவும் பொழுது அதில் உள்ள நுண் கிருமிகள் அழிக்கப்பட்டு விடும்.

*அதேபோல் தயிரில் கால்சியம், புரோட்டீன்,வைட்டமின் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.தயிரும் இயற்கையாவே குளிர்ச்சி தன்மை கொண்டிருக்கிறது.