அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!!

0
181
#image_title

அடிக்கடி தலையில் நீர்கோர்த்துக் கொள்கிறதா? அப்போ நொச்சி இலை நீரில் ஆவி பிடித்தால் நல்ல பலன் கிடைக்கும்!!

உங்களில் பலருக்கு அடிக்கடி தலையில் நீர் கோர்த்துக் கொள்ளும் பிரச்சனை இருக்கும்.இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

அதிக நேரம் வேலை பார்த்தல்,நீண்ட நேரம் பயணம் செய்தல்,தலைக்கு குளித்தால் துவட்டாமல் ஈர்த் தலையுடன் இருத்தல்,காற்று மாசுபாடு போன்ற காரணங்களால் தலையில் நீர் கோர்த்துக் கொள்கிறது.

தலையில் நீர்கோர்த்துக் கொள்வதால் அடிக்கடி தலைவலி,தலை பாரம்,மயக்கம்,ஜன்னி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.அடிக்கடி தலையில் நீர் கோர்த்துக் கொண்டால் உடல் சார்ந்த பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.

எனவே தலையில் நீர்கோர்த்தல் பாதிப்பை இந்த வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்து கொள்ளுங்கள்.

1)நொச்சி இலை
2)நீர்

முதலில் ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ளவும்.அதன் பிறகு அதில் 3/4 பாகம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

பிறகு ஒரு கைப்பிடி அளவு நொச்சி இலையை அதில் போட்டு கொதிக்க விட்டு ஆவி பிடித்து வந்தால் தலையில் நீர்கோர்த்தல் பிரச்சனை முழுமையாக சரியாகும்.

Previous articleகட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்: 10 மூலிகைகளும் அதனால் மனித உடலுக்கு கிடைக்கும் முக்கிய பலன்களும்!!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைலில் மொரு மொரு ரவா மீன் ப்ரை – சுவையாக செய்வது எப்படி?