சொத்தை பல்லில் பதுங்கி நம்மை படுத்தி எடுக்கும் புழுக்கள் முழுவதும் துடிதுடித்து வெளியேற வேண்டுமா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Divya

சொத்தை பல்லில் பதுங்கி நம்மை படுத்தி எடுக்கும் புழுக்கள் முழுவதும் துடிதுடித்து வெளியேற வேண்டுமா? அப்போ உடனே இதை ட்ரை பண்ணுங்க!

தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் மற்றும் இரவு உணவு உட்கொண்ட பின் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் நல்ல பற்களை சொத்தையாக்கி கொள்கிறோம். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தீர்வு காண்பது மிகவும் முக்கியமான ஒன்று.

பல் சொத்தையாக காரணம்:-

*அதிகப்படியான இனிப்பு உண்ணுதல்

*பற்களை முறையாக துலக்காதது

*உணவு உட்கொண்ட பின் வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல்

*குளிர்ந்த உணவுகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்

பல் சொத்தையால் ஏற்படும் பாதிப்புகள்:-

*பல் குடைச்சல்

*வாய் துர்நாற்றம்

*பல் கூச்சம்

*ஈறுகளில் வீக்கம்

*பற்களில் புழு உற்பத்தி ஆகுதல்

தேவையான பொருட்கள்:-

*வெள்ளை பூண்டு

*கல் உப்பு

*கடுகு எண்ணெய்

செய்முறை:-

முதலில் 3 பூண்டு பற்கள் எடுத்து அதன் தோலை நீக்கி காய்கறி சீவல் கொண்டு சீவிக் கொள்ளவும். அடுத்து அதில் 1/4 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.

பின்னர் கடுகு எண்ணெய் 1 தேக்கரண்டி எடுத்து அதில் ஊற்றி நன்கு கலந்து சிறு உருண்டைகளாக பிடித்து சொத்தைப் பல் இருக்கும் இடத்தில் வைக்கவும். தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்கு பல்லில் வைத்திருந்து பின்னர் எடுத்து விடவும். இவ்வாறு செய்தால் பல்லில் பதுங்கி நமக்கு குடைச்சல் கொடுத்து வந்த புழுக்கள் முழுவதும் வெளியேறி விடும்.

பயன்கள்…

**பூண்டில் அதிகளவு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருக்கிறது. இவை வாயில் உள்ள பாக்டீரியாக்களை கொல்லும் திறன் கொண்டது.

**கல் உப்பு, பல் இடுக்குகளில் இருக்கும் உணவுத் துகள்கள், கிருமிகள் உள்ளிட்டவற்றை நீக்கும் தன்மை கொண்டது.

**கடுகு எண்ணெய்க்கு பற்களில் உள்ள அனைத்து கிருமிகளையும் அழிக்கும் திறன் இருக்கிறது.

மற்றொரு தீர்வு:-

கொய்யா இலை 10 எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின் ஒரு உரலில் நறுக்கி வைத்துள்ள கொய்யா இலைகளை சேர்த்து இடித்துக் ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

பிறகு அதில் 1/2 தேக்கரண்டி இடித்த மிளகு, கஸ்தூரி மஞ்சள் 1 தேக்கரண்டி, கல் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி சொத்தை பல் இருக்கும் இடத்தில் வைத்து வைக்கவும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தோம் என்றால் சொத்தைப் பல்லில் பதுங்கி கிடக்கும் புழுக்கள் முழுவதும் வெளியேறி விடும்.