காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Photo of author

By Divya

காலை எழுந்தவுடன் “கருவேப்பிலை நீர்” பருகினால் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

அன்றாடம் சமையலில் வாசனைக்காக பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்று கறிவேப்பிலை. இதில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

கருவேப்பிலையில் உள்ள சத்துக்கள்:-

*நார்ச்சத்து

*கார்போஹைட்ரேட்

*கால்சியம்

*பாஸ்பரஸ்

*இரும்புச் சத்து

*விட்டமின் சி, ஏ, பி, இ

இந்த கருவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து பருகி வந்தோம் என்றால் உடலில் உள்ள நோய் பாதிப்புகள் விரைவில் சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

*கருவேப்பிலை – 3 முதல் 4 கொத்து

*தண்ணீர் – 1 கிளாஸ்

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 3 முதல் 4 கொத்து கருவேப்பிலை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு பவுலுக்கு வடிகட்டி கருவேப்பிலை சாறு எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து 1 கிளாஸ் தண்ணீரில் இந்த கருவேப்பிலை சாற்றை கலந்து காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதன் மூலம் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கும்.

கருவேப்பிலை நீர் பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

*இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இந்த கருவேப்பிலை நீர் பெரிதும் உதவுகிறது.

*உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதில் இந்த கருவேப்பிலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

*இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும் என்றால் கருவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இந்த கருவேப்பிலை இரத்த அழுத்தம், இரத்தக் கட்டிகளை தடுத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

*மலச்சிக்கல் பாதிப்பு இருக்கும் நபர்கள் தினமும் கருவேப்பிலையை உண்டு வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

*தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பிலை நீர் பருகுவதன் மூலம்முடி உதிர்வு பிரச்னை சரியாவதோடு, முடி அடர்த்தியாக வளரும். இந்த கருவேப்பிலை நரைத்த முடியை கருமையாக மாற்றும்.

*கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற இந்த கருவேப்பிலை நீர் பெரிதும் உதவுகிறது.