இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

Photo of author

By Divya

இதை 1 கிளாஸ் குடித்தால் நாள்பட்ட கெட்டி சளி சில நிமிடங்களில் கரைந்து வெளியேறி விடும்!!

சளி பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்யாமல் விட்டால் அவை நாளடைவில் தீராத நெஞ்சு சளி பாதிப்பாக மாறிவிடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது.

நெஞ்சு சளியால் ஏற்படும் பாதிப்பு:-

ஆஸ்துமா, மூக்கில் அலர்ஜி, சைனஸ் பாதிப்பு, மூச்சிரைப்பு, மூக்கு ஒழுகுதல், மூக்கடைப்பு
மூச்சு விடுதலில் சிரமம், தொண்டை வலி, தொண்டை புண்.

நெஞ்சு சளிக்கான அறிகுறிகள்:-

அதிக சளி, வறட்டு இருமல், தலைபாரம், நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல், சளி அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுதல், சளியில் ரத்தம் கலந்து வெளியேறுதல்.

தேவையான பொருட்கள்:-

*பச்சை மஞ்சள் கிழங்கு

*பால்

*மிளகு

செய்முறை…

1 இன்ச் பச்சை மஞ்சளை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து 4 மிளகுகை மிக்ஸி ஜாரில் சேர்த்து 1 சுத்து விடவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.

அதில் அரைத்து வைத்துள்ள மஞ்சள் மற்றும் இடித்து வைத்துள்ள மிளகை சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி பருகவும். இவ்வாறு இரவு தூங்குவதற்கு முன் அருந்தி வருவதன் மூலம் நாள்பட்ட கெட்டி சளி முழுவதும் கரைந்து வெளியேறிவிடும்.