மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் பாதிப்பு நீங்க இதை 1 கிளாஸ் பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!
தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதை சரி செய்ய ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் சிறந்த தீர்வாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
*ஆட்டு நெஞ்சு எலும்பு – 250 கிராம்
*சீரகம் – 1 தேக்கரண்டி
*மிளகு – 1 தேக்கரண்டி
*கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
*பூண்டு – 6 பற்கள்
*சின்ன வெங்காயம் – 1 கப்
*எண்ணெய் – 1 தேக்கரண்டி
*பட்டை – 1 துண்டு
*கிராம்பு – 5
*சோம்பு – ஒரு ஸ்பூன்
*பிரியாணி இலை – 1
*தக்காளி – 1
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
*கல் உப்பு – தேவையான அளவு
*கறிவேப்பிலை – 2 கொத்து
*கொத்துமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
செய்முறை:-
முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி மிளகு, 1 தேக்கரண்டி கொத்தமல்லி சேர்த்து மிதமான தீயில் வறுத்து அடுப்பை அணைக்கவும்.
பிறகு இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.
அடுத்து பூண்டை தோலுடனும், சின்ன வெங்காயத்தையும் நன்கு தட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்த அடுப்பில் குக்கர் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். அவை சூடானதும் பட்டை, சோம்பு, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் நெஞ்சு எலும்பு கறியை போட்டு வதக்கவும்.
பிறகு தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி அளவு அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.
பிறகு குக்கரை மூடி மிதமான சூட்டில் 10 விசில் வரும் வரை வேக விட்டு அடுப்பை அணைக்கவும். விசில் நின்றதும் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை இலைகளை சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி பருகவும்.
இந்த ஆட்டு நெஞ்சு எலும்பு சூப் மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்ல தீர்வாக இருக்கும்.