உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க.. இதை 1 கிளாஸ் குடிங்கள்..!

Photo of author

By Divya

உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க.. இதை 1 கிளாஸ் குடிங்கள்..!

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரிக்கவே மாட்டேங்குது என்று சிலர் புலம்பி கேட்டிருப்போம். ஒரு சிலருக்கு அதிகம் சாப்பிடாமல் எடை கூடும்.. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலும் எடை மட்டும் அதிகரிக்காது.

இவ்வாறு உடல் எடை கூடவே மாட்டேங்குது என்று வருந்தும் நபர்கள் தினமும் ஒரு ஆரோக்கிய பானம் குடிப்பது நல்லது.

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க தேங்காய் பால் குடிக்கலாம்.

தேங்காய்
கருப்பு எள்
செவ்வாழை பழம்
நாட்டு சர்க்கரை

ஒரு கப் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டி பாலாக எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து 1 ஸ்பூன் கருப்பு எள் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு மிக்ஸி ஜாரில் அரைத்த தேங்காய் பால், செவ்வாழை பழத் துண்டுகள், கருப்பு எள் பொடி மற்றும் நாட்டு சர்க்கரை சிறிது சேர்த்து அரைத்து ஒரு கிளாஸிற்கு ஊற்றி குடிக்கவும். இந்த பானம் உடல் எடையை அதிகரிக்க உதவும்.

பால்
தேன்

ஒரு கிளாஸ் சூடான பாலில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.