இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..!

0
197
#image_title

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க எளிய வழிகள்..!

சிறியவர்கள்.. பெரியவர்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் ஏற்படும் நோய் சர்க்கரை. கடந்த 30 வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த சர்க்கரை இன்று அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நோயாக மாறி விட்டது.

சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டால் அதை கட்டுக்குள் வைக்க தொடர்ந்து மாத்திரை எடுத்து வர வேண்டும்.

இனிப்பு உணவுகளுக்கு குட் பாய் சொல்லி விட வேண்டும். உணவு முறையில் கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும். உடலில் அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பல விஷயங்களை சர்க்கரை வியாதி இருப்பவர்கள் பின்பற்ற வேண்டும். அதுமட்டும் இன்றி மேலும் சில விஷயங்களை பின்பற்றினால் சர்க்கரை நோய் முழுவதுமாக கட்டுக்குள் வரும்.

தினமும் அதிகாலை நேரத்தில் உடல் பயிற்சி, நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். பொதுவாக நார்ச்சத்து உணவுகள் இரத்தத்தில் உள்ள சரக்கரை அளவை அதிகளவில் குறைக்கும் ஆற்றல் கொண்டது.

மாவு சத்து நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உணவு உண்ட உடனே படுக்கச் செல்லக் கூடாது.

தினமும் 3 வேளை உணவை உரிய நேரத்தில் சாப்பிட வேண்டும். உணவை தவிர்த்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதை முறையாக செய்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.