அசிங்கமாக தொங்கும் தொப்பை குறைய இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!!

Photo of author

By Divya

அசிங்கமாக தொங்கும் தொப்பை குறைய இதை 1 கிளாஸ் பருகுங்கள்..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதில் வயிற்றுப் பகுதியில் தொங்கி இருக்கும் தொப்பையால் நம் உடல் ஆரோக்கியமும், நம் அழகும் பாழாகும் சூழல் ஏற்படுகிறது.

தொப்பை ஏற்படக் காரணங்கள்:-

*அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்

*துரித உணவுகள்

*கார்போஹைட்ரேட்

*உடல் உழைப்பு இல்லாமை

*எண்ணெய்யில் பொரித்த, வறுத்த உணவுகள்

*பகல் நேர உறக்கம்

தேவையான பொருட்கள்:-

*இஞ்சி

*துளசி

*தேன்

செய்முறை…

ஒரு உரலில் 1 துண்டு இஞ்சி சேர்த்து இடித்துக் கொள்ளவும். பின்னர் 10 முதல் 15 துளசி இலைகளை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அதில் இடித்து வைத்துள்ள இஞ்சி மற்றும் துளசி இலைகளை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி தேன் கலந்து பருகவும். இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகுவது நல்லது. இவ்வாறு தொடர்ந்து பருகி வருவதினால் வயிற்றில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்பு முழுவதும் கரைந்து உடல் பிட்டாக இருக்கும்.