சளி மற்றும் வறட்டு இருமல் பாதிப்பு நீங்க பாலில் இந்த 2 பொருட்களை கலந்து பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

0
31
#image_title

சளி மற்றும் வறட்டு இருமல் பாதிப்பு நீங்க பாலில் இந்த 2 பொருட்களை கலந்து பருகுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!

தமிழகத்தில் தற்பொழுது பருவமழை காலம் என்பதினால் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் நம்மை எளிதில் பாதித்து விடும். இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்து கொண்டோம் என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அந்த வகையில் சளி மற்றும் வறட்டு இருமலை சரி செய்ய பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்த்து பருகலாம். மஞ்சளில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. இவை சளி பாதிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கும். அதேபோல் மிளகில் அடங்கி இருக்கும் காரம் வறட்டு இருமலை சரி செய்ய உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*பால் – 1 கிளாஸ்

*மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு

*மிளகுத் தூள் – சிட்டிகை அளவு

*பனங்கற்கண்டு – சிறிதளவு

செய்முறை…

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றிக் கொள்ளவும். மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்க விட்டு பின்னர் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் ஒரு உரலில் 3 மிளகு சேர்த்து இடித்து கொள்ளவும். இதை கொதிக்கும் மஞ்சள் பாலில் கலந்து விடவும். பிறகு சுவைக்காக சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை 1 கிளாஸுக்கு மாற்றி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும். இவ்வாறு செய்தால் மழைக்காலங்களில் ஏற்படும் வறட்டு இருமல், சளி பாதிப்பு நீங்கும்.