ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் பிரபல மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனேகா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் தடுப்பூசியை உருவாக்கி, அது தற்போது மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலிய அரசு அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனத்துடன் தடுப்பூசிக்காக 18 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.  பிரதமர் ஸ்காட் மோரீசன் நேற்று கூறும்போது இந்த  தடுப்பூசி, உலகின் மிக முன்னேறிய மற்றும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசி ஆகும். இதற்காக நாம் ஒப்பந்தம் போட்டுள்ளோம். இந்த தடுப்பூசி ஒவ்வொரு ஆஸ்திரேலியருக்கும் கிடைக்கும் என்று  கூறினார்.