அதிமுகவின் பொதுக்குழு தொடர்பான வழக்கு! இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு அதிமுக யார் பக்கம்?

0
209

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், அந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு முன்னர் விருந்த நிலையை அதிமுகவில் தொடர வேண்டும் எனவும், தீர்ப்பு வழங்கினார். இதன் காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் அதிர்ச்சிக்குள்ளையினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்க்கும் விதமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி மேல் முறையீடு செய்தார் இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எம் துரைசாமி, சுந்தர மோகன், உள்ளிட்டோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் டில்லியின் மூத்த வழக்கறிஞர் சி எஸ் வைத்தியநாதன், சி ஆரியமா சுந்தரம், விஜய் நாராயண், பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், உள்ளிட்டோர் ஆஜராகினர்.

அதேபோல வைரமுத்து தரப்பில் வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜராகி வாதம் செய்தார். எல்லா தரப்பு வாதங்களையும், கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து கடந்த மாதம் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10:30 மணியளவில் நீதிபதிகள் பிறப்பிக்கின்றன. இதன் காரணமாக, பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் உள்ளிட்டோரிடையே பெரும் எதிர்பார்ப்பும், பரபரப்பும், ஏற்பட்டுள்ளது.

Previous articleநம்ப வீட்டு புகழுக்கு டும் டும்!!..காதலியை கரம் பிடித்த காதல் மன்னன்!..
Next articleஅடுத்த கேப்டன் இவர்தான்! ஆருடம் தெரிவிக்கும் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here