ஆண்மை குறைபாடு நீங்க “சிறுகீரை கடையல்.. இப்படி செய்து சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

0
87
#image_title

ஆண்மை குறைபாடு நீங்க “சிறுகீரை கடையல்.. இப்படி செய்து சாப்பிடுங்கள்!! விரைவில் பலன் கிடைக்கும்!!

இன்றைய நவீன காலத்தில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் ஆண்கள் பலருக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும் பாதிப்பு அதிகமாகி வருகிறது.இந்த பாதிப்பை சரி செய்ய ஆண்கள் சிறுகீரையை அடிக்கடி உண்டு வருவது மிகவும் முக்கியம் ஆகும்.

இந்த கீரையில் அதிகளவு இரும்புசத்து,சுண்ணாம்பு சத்து,நீர்சத்து,கொழுப்பு,தாது உப்பு,புரதம், மாவுசத்து,வைட்டமின் ஏ,பி மற்றும் சி உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*சிறு கீரை – 1 கட்டு

*துவரம்பருப்பு – ஒரு டம்ளர்

*வெங்காயம் – 2

*தக்காளி – 3

*பச்சைமிளகாய் – 5

*புளி – 1எலுமிச்சம் பழ அளவு

*பூண்டு – 10 பற்கள்

*கடுகு – 1/2 தேக்கரண்டி

*சீரகம் – 1/2 தேக்கரண்டி

*எண்ணெய் – 3 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை;-

முதலில் 1 கட்டு சிறுகீரை எடுத்து அதன் நுனி காம்பு பகுதியை தவிர்த்து மற்ற அனைத்தையும் நீக்கி விடவும்.பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் நன்கு அலசிக் கொள்ளவும்.பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து அதில் 1 டம்ளர் துவரம்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் அதில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும்.

பிறகு பருப்பு பாதி வெந்து வந்ததும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும்.தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள தக்காளி,வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு 5 பற்கள்,சிறு துண்டு புளி மற்றும்தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விசில் போடவும்.

நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து கொள்ளவும்.பின்னர் குக்கரில் இருந்து பிரஷர் போனதும் அதை திறந்து ஒரு மத்து வைத்து நன்கு கடைந்து கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.அவை சூடேறியதும் 1/2 தேக்கரண்டி கடுகு,1/2 தேக்கரண்டி சீரகம் சேர்த்து பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து தாளித்து பொருட்களை கீரையில் சேர்த்துக் கொள்ளவும்.

Previous articleசளி மற்றும் இருமல் பாதிப்பு இருப்பவர்கள் “மிளகு குழம்பு” செய்து சாப்பிடுங்கள்!!
Next articleடீ கடையில் ருசி பார்த்த மொறு மொறு “கீரை போண்டா” – வீட்டு முறையில் செய்வது எப்படி?