வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு!

0
109
Fraud of money to buy a job! Excitement in the area!
Fraud of money to buy a job! Excitement in the area!

வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி! அப்பகுதியில் பரபரப்பு!

கோவை மாவட்டம்  சுந்தராபுரம் லட்சுமணன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் மதன்குமார் (31) இவரிடம் பெங்களூரைச் சேர்ந்த திப்பு என்பவர் சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியிருந்தார்.

அதற்காக ஒரு  லட்ச ரூபாய்  வங்கியில் செலுத்துமாறு கேட்டுள்ளார். அதனை  நம்பிய  மதன் குமார் வங்கியின்  மூலம்  லட்ச ரூபாய்  அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் வேலை எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. இதைதொடர்ந்து பணத்தை மோசடி செய்து விட்டார்என்பது தெரியவந்தத். இதுகுறித்து மதன் குமார் போத்தனூர் போலீசாரிடம்  புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து திப்பு என்பவரை தேடி வருகின்றனர்

author avatar
Parthipan K