சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு!

Photo of author

By Divya

சிறுநீரக கல் முதல் உடல் பருமன் வரை.. இந்த ஒரு சூப்பில் தீர்வு இருக்கு!

உடலை நோயின்றி வைத்துக் கொள்ளவது மிகவும் அவசியம் ஆகும். ஆனால் பல காரணங்களால் உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறோம். இதனால் விரைவில் நோயாளிகளாக உருவெடுத்து விடுகிறோம்.

உடலில் உள்ள அனைத்துவித நோய்களையும் குணமாக்கி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வரவும்.

சூப் செய்ய தேவைப்படும் பொருட்கள்…

*சின்ன வெங்காயம்
*தக்காளி
*பூண்டு
*மிளகு
*சீரகம்
*வெந்தயம்
*கல் உப்பு
*மஞ்சள் தூள்
*சுரைக்காய்

சூப் செய்முறை…

மிக்ஸி ஜாரில் தோல் நீக்கிய சின்ன வெங்காயம் சிறிதளவு, நறுக்கிய தக்காளி ஒன்று, பூண்டு பல் மூன்று, 1/2 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து சிறிய சைஸ் சுரைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 400 மில்லி தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்க்கவும். பிறகு நறுக்கிய சுரைக்காய் துண்டுகள், சிட்டிகை அளவு கல் உப்பு, சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து 200 மில்லி தண்ணீராக வற்றி வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விடவும்.

இந்த சூப்பை நன்கு ஆறவிட்டு ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி குடிக்கவும். வாரத்திற்கு இருமுறை என்ற எண்ணிக்கையில் தொடர்ந்து பருகி வந்தால் உடல் எடை, சிறுநீரக கல், சர்க்கரை நோய், கை கால் வீக்கம், மஞ்சள் காமாலை உள்ளிட்ட அனைத்து வித நோய் பாதிப்புகளும் குணமாகும்.