நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம்..!

0
302
#image_title

நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலை..!! இன்றைய நிலவரம்..!

நாணய ஏற்ற இறக்கங்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற காரணிகள் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவசர கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக்க முடியும் என்பதினால் தங்கத்தில் அதிக முதலீடு செய்யப்படுகிறது. அதுமட்டும் இன்றி எதிர்கால வாழ்க்கைக்கு தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பார்க்க முடியும்.

ஆனால் இந்த தங்கத்தின் விலை சில தினங்களாக மளமளவென அதிகரித்து விற்பனையாகி வருகிறது.

நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,880 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை மேலும் உயர்ந்து இருக்குறது.

அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,895க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.47,160க்கும் விற்பனையாகி வருகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.6,431க்கும், சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.51,448க்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.81 ரூபாய்க்கும் 1 கிலோ வெள்ளி ரூ.81,000க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை சில தினங்களாக அதிகரிக்கத் தொடங்கி இருப்பது சாமானியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.