‘Google அறிமுகப்படுத்தியுள்ள Google News Showcase’ 30 பங்கேற்பாளர்களுடன் இந்தியாவில் தொடக்கம்!

0
85

கூகுள் தனது புதியதாக தயாரித்துள்ள Google News Showcase புதிய தயாரிப்புடன் களமிறங்கி உள்ளது. இது பங்குபெறும் பங்கேற்பாளர்கள் தனித்துவத்தையும் மற்றும் குரலையும் பகிர்ந்து கொள்ள உதவுகிறது.

மேலும் வாசகர்கள் மிகவும் சிக்கலான கதைகளை மிகவும் ஆழமாக படிப்பதற்கு ஏற்ற வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த Google News Showcase பல பில்லியன் டாலர்கள் உலகளாவிய முதலீட்டின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

கூகுள் செய்திகளில் உள்ள செய்தியின் உள்ளடக்கம் மிகவும் பயனாக்ககூடிய ஒரு இடத்தை வழங்கும் என்றும், மேலும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆன்லைன் அனுபவத்தை இது தரும் என்றும், மேலும் பங்கேற்பாளர்களின் உரிமம் இருக்கும் என கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை துணை தலைவர் பிராட் பெண்டர் கூறியுள்ளார்..

இந்த கூகுள் நியூஸ் பேனல் ஆனது செய்தியை சொல்வதற்கும் செய்தியை படிப்பதற்கும் ஏற்றவாறு எந்த செய்தி பகுதியில் படிக்கிறோமோ அந்த செய்தி சேனல்கள் பகுதியே முன்னாடி வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. இது புதிதாக சேரும் வாடிக்கையாளர்களுக்கு பயனளிப்பதாக அமையும் என்று கூறியுள்ளார்.

இந்த பகுதியில் வரும் விளம்பரங்களை தடை செய்து விருப்பமான செய்தி பக்கங்களை தொடர்ந்து படிப்பதற்கு ஒரு நட்புறவை உருவாக்கித் தருகிறது.

லண்டன் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் 700 பங்கேற்பாளர்கள் உடன் நடைமுறையில் உள்ளது. இப்பொழுது இந்தியாவில் 30 பங்கேற்பாளர்கள் உடன் கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. முதலில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் செய்திகள் வெளிவரும் மற்ற மொழிகள் பிற்பாடு அறிமுகப்படுத்தப்படும் என்று சொல்லியுள்ளது.