வழுக்கை தலையில் முடி வளர பாட்டி வைத்தியம்!! நம்புங்க விரைவில் பலன் கிடைக்கும்!!
இன்றைய காலத்தில் பெரியவர்கள் முதல் இளம் வயது ஆட்கள் வரை அனைவருக்கும் வழுக்கை பெரும் பிரச்சனையாக இருக்கிறது.
வழுக்கை ஏற்படக் காரணங்கள்:-
*வாழ்க்கை முறை மாற்றம்
*உணவு முறை மாற்றம்
*மன அழுத்தம்
*ஜீன் குறைபாடு
*ரசாயனம் கலந்த ஷாம்புவை தலைக்கு உபயோகிப்பது
*அதிகப்படியான முடி உதிர்தல்
*பொடுகுத் தொல்லை
*முறையற்ற தூக்கம்
இந்த வழுக்கை பிரச்சனையால் விரைவில் வயதான தோற்றத்தை அடையும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியம் ஆகும்.
தேவையான பொருட்கள்:-
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*கருவேப்பிலை – 10 இலைகள்
*இஞ்சி துருவல் – 1 இன்ச்
*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
*செம்பருத்தி பூ பொடி – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் கருஞ்சீரகம் 1 தேக்கரண்டி மற்றும் வெந்தயம் 1 தேக்கரண்டி அளவு உரலில் போட்டு நன்கு இடித்து கொள்ளவும்.
அடுத்து 10 முதல் 15 கருவேப்பிலை இலைகளை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அவை நன்கு கொதிக்கும் சமயத்தில் இடித்து வைத்துள்ள கருஞ்சீரகம் + வெந்தயப் பொடியை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பிறகு இடித்து வைத்துள்ள கருவேப்பிலை இலை மற்றும் செம்பருத்தி பூ பொடி சேர்த்து தண்ணீர் நன்கு கொதித்து நிறம் மாறி வந்த பின்னர் அணைக்கவும்.
இந்த கலவை நன்கு ஆறிய பிறகு ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். பின்னர் தலை முழுவதும் ஸ்பிரே செய்ய வேண்டும். குறிப்பாக வழுக்கை காணப்படும் இடங்களில் ஸ்பிரே செய்து மசாஜ் செய்து வந்தோம் என்றால் புதிதாக முடி வளரத் தொடங்கும். இந்த ஸ்பிரேவை தலையில் போட்ட பின்னர் தலைக்கு குளிக்க வேண்டியது கட்டாயம் இல்லை. தொடர்ந்து இதை பயன்படுத்தி வந்தோம் என்றால் இளம் வயது வழுக்கை எற்படாது. வழுக்கை உள்ள இடத்தில் புதிதாக முடி வளரத் தொடங்கும்.