எலும்புகளுக்கு வலிமை சேர்க்க வேண்டுமா! உளுந்தங்கஞ்சி சாப்பிடுங்க!!

0
109
#image_title

எலும்புகளுக்கு வலிமை சேர்க்க வேண்டுமா! உளுந்தங்கஞ்சி சாப்பிடுங்க!!

நம்முடைய உடலில் உள்ள எலும்புகளுக்கு கூடுதல் வலிமையை சேர்க்கும் உளுந்தங்கஞ்சியை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

உளுந்தில் பலவகையான உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. முக்கியமாக எலும்புகளுக்கு வலிமையை தரக்கூடிய கால்சியம் சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது. இதனால் முகத்தில் கஞ்சி தயார் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள எலும்புகள் பலம் பெறும்.

உளுந்தங்கஞ்சியை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். மழை காலங்களில் நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதில் உளுந்தங்கஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த உளுந்தங்கஞ்சியை தயார் செய்ய தேவையான பொருட்கள் எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

உளுந்தங்கஞ்சியை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* கருப்பு உளுந்து – 200 கிராம்
* அரிசி – 100 கிராம்
* சீரகம் – 1 ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
* தேங்காய் – துருவியது ஒரு கப்
* பூண்டு – 10 பல்

செய்முறை…

இந்த உளுந்தங்கஞ்சியை தயார் செய்வது மிகவும் எளிமையான வழிமுறை ஆகும். முதலில் அடுப்பை பற்ற. வைக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு குக்கரை வைத்து அதில் உளுந்தங்கஞ்சிக்கு தேவையான உடைத்த கருப்பு உளுந்து, அரிசி, சீரகம், பூண்டு ஆகியவற்றை ஒரு குக்கரில் மேற்குறிப்பிட்ட அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் 10 டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைத்து 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

5 விசில் வந்த பிறகு வேக வைத்த உளுந்தங்கஞ்சியை எடுத்து நன்கு மசித்து. விட்டு கிளறிக் கொள்ள வேண்டும். பின்னர் இறுதியாக இதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறிவிட்டு இந்த உளுந்தங்கஞ்சியை சாப்பிடலாம்.

இந்த உளுந்தங்கஞ்சியில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியவை அதிகளவில் இருக்கின்றது. இதனால் எலும்புகளின் பலம் அதிகமாகும். மேலும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மூட்டுவலி, கை வலி, கால் வலி ஆகியவற்றில் இருந்து விடுபடலாம். மேலும் சுறுசுறுப்பாக இருக்க உதவி செய்யும். பெண்கள் உளுந்தங்கஞ்சியை சாப்பிடும் பொழுது பிரசவத்திற்கு பின்னர் வரும் இடுப்பு வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.