மூல நோய்க்கு பாட்டி வைத்தியம்.. இதை காலையில் 1 கிளாஸ் பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

மூல நோய்க்கு பாட்டி வைத்தியம்.. இதை காலையில் 1 கிளாஸ் பருகினால் உடனடி தீர்வு கிடைக்கும்!!

பைல்ஸ் என்று சொல்லப்படும் மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது. இதில் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் மலம் கழிப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக மாறி விடும். வற மலம் வெளியேறும் பொழுது வலி அதிகமாக ஏற்பட்டு அவை வெளியேறும் பகுதிகளில் புண்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பாதிப்பை இயற்கை வழிமுறைகளை பின்பற்றி குணப்படுத்துவது நல்லது.

பைல்ஸ் அறிகுறிகள்:-

*மலத்துடன் இரத்த போக்கு

*மலம் கழிப்பதில் சிரமம்

*ஆசனவாய் பகுதியில் அரிப்பு

*ஆசனவாய் பகுதியில் எரிச்சல்

*ஆசனவாய் சுற்றி வீக்கம்

*ஆசனவாய் சுற்றி கட்டிகள்

பைல்ஸ் நோயை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*மஞ்சள்

*துத்தி கீரை

*பால்

செய்முறை:-

முதலில் சிறிதளவு துத்தி கீரையை எடுத்து பாத்திரத்தில் போட்டு நன்கு அலசிக் கொள்ள வேண்டும். அடுத்து சிறு துண்டு மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அம்மி இருபவர்கள் அதில் அரைக்கலாம். இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைக்காலம். இந்த இரண்டு பொருட்களளையும் மைய்ய அரைத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும். பால் கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.

அடுத்து அரைத்து வைத்துள்ள துத்தி கீரை, மஞ்சள் விழுதை அதில் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இந்த பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகி வருவதினால் நாள்பட்ட பைல்ஸ் பிரச்சனை சரியாகும்.