கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!

Photo of author

By Divya

கேப்பே விடாமல் இருமல் வருகிறதா? அப்போ இந்த வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க!

இரவு நேர உறக்கத்தின் போது இடைவிடாத இருமல் பாதிப்பை பலரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இவை சாதாரண இருமல் அல்ல. சைன்ஸ், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். இதை சரி செய்ய மருத்துவரை நாட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது. காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ குறிப்புகளை பின்பற்றினாலே போதுமானது.

*மஞ்சள்
*தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும். பின்னர் இதை ஒரு கிளாஸுக்கு ஊற்றி அதில் சிட்டிகை அளவு மஞ்சள் மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால் இடைவிடாத இருமல் பாதிப்பு நீங்கும்.

*துளசி
*தேன்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் தேவைக்கேற்ப தூளசி இலைகளை போட்டு காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் பிரச்சனை குணமாகும்.

*இஞ்சி
*தேன்

ஒரு கிளாஸ் நீரில் சிறிதளவு இடித்த இஞ்சி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து அருந்தினால் இடைவிடாத இருமல் பாதிப்பு முழுமையாக நீங்கிவிடும்.

*எலுமிச்சை சாறு
*தேன்

2 ஸ்பூன் அளவு எலுமிச்சை சாற்றில் 1 ஸ்பூன் தேன் குழைத்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.