இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
224
Heavy rain today only for these five districts! Information released by Chennai Meteorological Department!
Heavy rain today only for these five districts! Information released by Chennai Meteorological Department!

இந்த ஐந்து மாவட்டங்களுக்கு மட்டும் இன்று கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த அடிபடையில் இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு  மாநிலங்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.

மேலும் நேற்று நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 13 சென்டிமீட்டர் மழையும் கோவை மாவட்டம் சின்னக்கல்லூர் மற்றும் நீலகிரி மாவட்டம் தேவாலாவின் தலா 9 சென்டிமீட்டர் மழையும் , பவானி, வால்பாறை சோலையார் உள்ளிட்ட இடங்களில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.

மேலும் இன்று சென்னை பொறுத்த வரை மேகமூட்டவுடன் வானிலை காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, திருப்பூர் ,தேனி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Previous articleபூங்காவில் சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட ‘கும்கி’ நடிகர்… போக்ஸோ சட்டத்தில் கைது… ஜாமீன் மறுப்பு
Next articleஉக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலால் 3.50 லட்சம் பேர் வெளியேற வலியுறுத்தல்!!