ஒரு நொடியில் ‘வாய் துர்நாற்றம்’ நீங்க ஈஸி டிப்ஸ் இதோ!! உடனே ட்ரை பண்ணுங்க!!
ஆரோக்கியமற்ற உணவு முறை பழக்கத்தால் வாய் துர்நாற்ற பாதிப்பை பலர் சந்தித்து வருகிறோம்.இந்த வாய் துர்நாற்றம் பற்களில் கிருமி,நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம், சொத்தைப்பல்,அல்சர்,குடல்புண் உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறது.இதை சரி செய்ய சில எளிய வழிகள் கீழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
*காலையில் பல் துலக்கிய பின்னர் 1/4 தேக்கரண்டி சோம்பு எடுத்து வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை சரி செய்ய முடியும்.
*ஏலக்காயை பொடி செய்து அதில் 1/4 தேக்கரண்டி எடுத்து சாப்பிடுவதன் மூலம் வாய் நறுமணமாக இருக்கும்.
*தினமும் உணவு எடுத்துக் கொண்ட பின் 1 அல்லது 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறை 1/4 கிளாஸ் தண்ணீரில் கலந்து வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் வாயில் உள்ள உணவு துகள்கள்,கிருமிகள் நீங்கி வாய் சுத்தமாக இருக்கும்.
*அதேபோல் உணவில் பயன்படுத்தும் சமையல் சோடாவில் 1/2 தேக்கரண்டி எடுத்து 1 கிளாஸ் தண்ணீரில் கலந்து வாயை நன்கு கொப்பளிப்பதன் மூலம் வாய் துர்நாற்றம் அகலும்.
*பிரியாணிக்கு பயன்படுத்தும் பொருட்களான பட்டை,இலவங்கம் உள்ளிட்டவற்றை அவ்வப்போது மென்று உண்பதன் மூலம் வாய் துர்நாற்றம் அகலும்.
*வாய் துர்நாற்றம் ஏற்பட அல்சர்,வயிற்றுப்புண்,செரிமான பாதிப்பு உள்ளிட்டவைகளும் முக்கிய காரணம் ஆகும்.இதனால் வயிறையும் நாம் சுத்தமாக வைத்திக் கொள்வது அவசியம்.குளிர்ச்சி நிறைந்த பொருட்களை சாப்பிடுவதை வழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.அதாவது தயிர்,இளநீர்,பழைய சாதம் உள்ளிட்டவை.அதேபோல் பற்களை சொத்தையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
*தினமும் காலை உணவிற்கு முன் மற்றும் இரவு உணவிற்கு பின் பல் துலக்குவது மிகவும் அவசியம்.பல் துலக்கிய பின்னர் உப்பு கலந்த நீர் கொண்டு வாயை நன்கு கொப்பளிக்கவும்.
*உணவு உட்கொண்ட பின்னர் எலுமிச்சை சாறு + உப்பு கலந்த கலவையை கொண்டு வாயை நன்கு சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்வதன் மூலம் வாய் துர்நாற்றம் அகலும்.
*அவ்வப்போது 10 முதல் 15 துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனை நீங்கும்.