மஞ்சள் படலம் படிந்த பற்களை வெண்மையாக்க எளிய வழிகள் இதோ!! நிச்சயம் பலன் கிடைக்கும்.. மறக்காமல் ட்ரை பண்ணி பாருங்க!!
நவீன கால உணவு முறை மாற்றத்தால் விரைவில் சொத்தை பல் உருவாகுதல்,பல்லில் மஞ்சள் படலம் ஏற்படுதல்,வாய்துர்நாற்றம்,ஈறுகளில் இரத்த கசிவு என்று பல பாதிப்புகளை சந்தித்து சந்தித்து வருகிறோம்.
இந்த பாதிப்புகளுக்கு விரைவில் தீர்வு காண முயலுங்கள்.இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.அதே போல் தான் மஞ்சள் நிற பற்களை சரி செய்வதற்கான முறையான வழிகளை கடைபிடிக்க வேண்டும்.வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை வைத்து சுலபமான முறையில் மஞ்சள் பற்களை வெள்ளை நிறத்திற்கு அழகாக மாற்ற முடியும்.
தீர்வு 1:
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
*சமையல் சோடா – 1 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு எலுமிச்சம் பழம் எடுத்து அதை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் அதில் பாதி எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு பவுலில் சாறு பிழிந்து கொள்ளவும்.1 அல்லது 1 1/2 தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு இருந்தால் போதும்.
பின்னர் சமையல் சோடா 1 அல்லது 1 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் பல் துலக்கும் பிரஸ் எடுத்து அதில் தாயார் செய்து வைத்துள்ள எலுமிச்சை சாறு + சமையல் சோடா கலவையை சேர்த்து பல் துலக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மஞ்சள் பற்கள் வெண்மையாக மாறிவிடும்.
தீர்வு 2:
தேவையான பொருட்கள்:-
*மஞ்சள் தூள் – 2 சிட்டிகை அளவு
*இஞ்சி – 1 தேக்கரண்டி(துருவியது)
*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
*உப்பு – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
1.முதலில் ஒரு பவுலில் துருவிய இஞ்சி 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும்.
2.ஒரு எலுமிச்சை பழத்தில் பாதி எடுத்து 2 தேக்கரண்டி அளவு சாறு பிழிந்து இஞ்சி துருவி வைத்துள்ள பவுலில் சேர்க்கவும்.
3.பின்னர் சமயலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பு 1 தேக்கரண்டி மற்றும் 2 சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழப்பி கொள்ளவும்.
4.செய்து வைத்துள்ள இந்த பேஸ்டை பல் துலக்க பயன்படும் பிரஸில் சேர்த்து நன்கு துலக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் மஞ்சள் பற்கள் வெண்மை நிறத்திற்கு மாறி விடும்.