கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!

0
83
#image_title

கிட்னி ஸ்டோன் கரைய மருந்து மாத்திரை இல்லாத எளிய பாட்டி வைத்தியம் இதோ!!

சிறுநீரகத்தில் உப்பு மற்றும் தாதுக்கள் அதிகளவில் படிந்தால் அவை நாளடைவில் கற்களாக உருவாகி விடும்.இவ்வாறு உருவான சிறுநீரக கற்களை கரைக்க இந்த கை வைத்தியத்தை முயற்சித்து வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு
2)தேன்

செய்முறை:-

ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிளாஸிற்கு பிழிந்து கொள்ளவும்.பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)பிரியாணி இலை
2)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கிளாஸ் அளவு நீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.அதன் பின்னர் ஒரு பிரியாணி இலையை அதில் போட்டு 1 அல்லது 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி இலை
2)தண்ணீர்
3)எலுமிச்சை சாறு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 10 அல்லது 15 துளசி இலைகளை போட்டு சூடு படுத்தவும்.

2 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளவும்.இதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் கிட்னி ஸ்டோனுக்கு தீர்வு கிடைக்கும்.