நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

Photo of author

By Divya

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

இன்றைய காலத்தில் ஆண் பெண் என்று வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு மூட்டு வலி.இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.இந்த மூட்டு வலி வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய் என்று சொல்லப்படுகிறது.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.இந்த மூட்டு வலி நாளடைவில் அதிக படியான சோர்வு,எடை இழப்பு,மூட்டு எழும்புகளில் வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.இவற்றை இயற்கை முறையில் சரி செய்ய எளிய வழிகள் பல இருக்கின்றது.இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மூட்டு வலி முற்றிலும் குணமாகிவிடும்.

தேவையான பொருட்கள்:-

கற்பூரம் – 6

முடக்கத்தான் கீரை எண்ணெய் – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

ஒரு பவுலில் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி போட்டு கொள்ளவும்.
பின்னர் அதில் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தில் 6 எடுத்து தூள் செய்து அதில் சேர்த்து கொள்ளவும்.

பின்னர் அதில் மூட்டு வலிக்கு சிறந்த கீரையான முடக்கத்தான் கீரையின் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த முடக்கத்தான் கீரை எண்ணெய் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அதில் இறுதியாக கடுகு எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து மூட்டுகளில் அப்ளை செய்யவும்.இரவு தூங்குவதற்கு முன் இதை மூட்டுகளில் அப்ளை செய்து வந்தோம் என்றால் நம்மை பாடாய் படுத்தி வந்த மூட்டு வலிக்கு விரைவில் குட் பாய் சொல்லிவிடலாம்.